தற்போது பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி மருத்துவமனையில் அனுமதி, மேலும் அவர் தொடர் மருத்துவர்களின் கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், தற்போது உடல் நிலை சீராக இருந்து வருவதாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி மருத்துவமனையில் அனுமதி
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
எல்.கே.அத்வானி :
பாஜக கட்சியின் மூத்த தலைவரான எல்.கே.அத்வானி(96) திடீர் உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளார்.
அத்துடன் தொடர் மருத்துவர்களின் கண்காணிப்பில் அத்வானி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவருக்கு என்ன பாதிப்பு ஏற்பட்டது என்பது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.
மூத்த தலைவரான எல்.கே.அத்வானி 1980 ஆம் ஆண்டு பாஜக கட்சி தொடங்கப்பட்டதில் இருந்து ஏறக்குறைய 30 ஆண்டுகளுக்கும் மேலாக தீவிர அரசியலில் இருந்த அவர் தற்போது வயது மூப்பின் காரணமாக தற்போது வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார்.
இதனை தொடர்ந்து பாகிஸ்தானின் கராச்சி நகரில் பிறந்த அத்வானி, தனது 14ஆம் வயதில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் தன்னை இணைத்துக்கொண்டார்.
இந்தியா – பாகிஸ்தான் பிரிவினைக்குப் பின்னர் இவரது குடும்பம் மும்பையில் குடியேறியது குறிப்பிடத்தக்கது. மேலும் பாஜகவில் நீண்ட காலம் தலைவராக இருந்த அவர் சட்டப்படிப்பு படித்துள்ளார்.
ரத யாத்திரை :
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிரதமராக பணியாற்றிய காலக்கட்டத்தில் அத்வானி துணை பிரதமராக பதவி வகித்தார். அதே பாஜக அரசில் உள்துறை அமைச்சராகவும் பணியாற்றி உள்ளார்.
மேலும் 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பாஜக சார்பில் அத்வானி பெயர் பிரதமர் வேட்பாளராக முன்மொழியப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் அந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்தது. அத்வானி தலைமையில் நடந்த ரத யாத்திரையில் தான் பாபர் மசூதி இடிக்கப்பட்டது.
தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டம் – பரிசீலனையில் இருப்பதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல் !
கடந்த 2015 ஆம் ஆண்டு அவருக்கு நாட்டின் உயரிய விருதான பத்மபூஷணும், சமீபத்தில் பாரத ரத்னா விருதும் வழங்கப்பட்டது. மேலும் அத்வானி எனது நாடு எனது வாழ்க்கை என்ற பெயரில் 1040 பக்கங்கள் கொண்ட சுயசரிதை எழுதி 2008 ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளார்.