தமிழக அரசு தற்போது முதியவர்களுக்கு இலவச பேருந்து பயணம் தொடர்பாக டோக்கன் வழங்கப்படும் தேதி குறித்து முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது.
இலவச பயணம்:
தமிழகத்தில் வாழும் ஏழை எளிய மக்களின் நல்வாழ்வுக்காக அரசு சார்பாக பல்வேறு நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் மகளிர்களுக்கு விடியல் திட்டத்தின் கீழ் இலவச பஸ் பயணம், பள்ளி மாணவர்களுக்கு கட்டணமில்லா இலவச பஸ் பயணம் என பல சலுகை திட்டங்கள் அமல்படுத்தி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது முதியவர்களுக்கு சூப்பர் திட்டம் ஒன்றை அரசு கொண்டு வந்துள்ளது.
முதியவர்களுக்கு இலவச பேருந்து பயணம் – டோக்கன் எப்போது வழங்கப்படும்?
அதாவது தமிழகத்தில் முதியவர்களுக்கு இலவசமாக பேருந்து பயண திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. இது தொடர்பாக மாநகர போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது, ” சென்னையைச் சேர்ந்த மூத்த குடிமக்களுக்கான அடுத்த ஆண்டு 2025 ஜனவரி முதல் ஜூன் வரை பயன்படுத்தக்கூடிய டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் ஒரு மாதத்திற்கு 10 டோக்கன்கள் வீதம் 6 மாதத்திற்கான கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன்களை வழங்கப்பட்டு வருகிறது.
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதன்மை தேர்வு 2025.., சான்றிதழ் பதிவு செய்ய டிசம்பர் 18 தான் கடைசி தேதி!
அதன் படி 42 மையங்களில் வரும் 21 டிசம்பர்-2024 முதல் 31 ஜனவரி-2025 மாதம் வரை விடுமுறையின்றி, அனைத்து நாட்களும் காலை 08.00 மணி முதல் இரவு 07.30 வரை வழங்கப்படும் என்று மாநகர போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. எனவே சென்னை மூத்த குடிமக்கள் இந்த பயண டோக்கன் மற்றும் அடையாள அட்டை பெற விரும்பினால் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆவணங்கள் அவசியம் தேவைப்படும்.
முக்கிய ஆவணங்கள்:
வயது சான்று (ஆதார் அட்டை / ஓட்டுநர் உரிமம் / கல்வி சான்றிதழ் / வாக்காளர் அடையாள அட்டை etc)
2 வண்ண புகைப்படங்கள் சமர்ப்பிக்க வேண்டும்
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
தமிழ்நாட்டில் நாளை (18.12.2024) மின்தடை பகுதிகள் ! TANGEDCO வெளியிட்ட அதிகாரபூர்வ அறிவிப்பு !
சுற்றுச்சூழல் ஆர்வலர் துளசி கவுடா மறைவு – பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல்!
விஜய்யின் TVKவில் இணைந்த 100 மூதாட்டிகள்… அதிக வரவேற்பு கொடுத்த இளைஞர்கள்..!
KTM 390 Adventure S முன்பதிவு ஆரம்பம் – எதிர்பார்ப்பில் வாடிக்கையாளர்கள்!!