
தமிழக மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் பணமோசடி வழக்கு ஜாமீன் மனு மீதான தீர்ப்பு வருகிற ஜனவரி 12 அன்று வழங்கப்படும் என்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தகவல் வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த ஜூன் மாதம் மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. அவருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.பின்னர் அமலாக்க துறையினர் சோதனை நடத்தினர். சோதனையின் முடிவில் அவர் சட்ட விரோதமாக பண மோசடி செய்தாக அவர் அமலாக்க துறையினரால் கைது செய்யப்பட்டார்.
அனைத்து வகை ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1000… அரசு அதிரடி அறிவிப்பு…
கைது செய்தவுடன் அவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டது. பின்னர் அவர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். அவரின் ஜாமீன் மனு சென்னை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இருப்பினும் அவருக்கு ஜாமீன் வழங்கப்படவில்லை. வழக்கு பின்னர் உச்சநீதிமன்றத்திற்கு சென்றது. ஆனால் உச்சநீதிமன்றம் வழக்கை மீண்டும் விசாரணை நீதிமன்றத்திற்கே அனுப்பியது. அவர் புழல் சிறையில் .அடைக்கப்பட்டார்.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு
தற்போது அவரின் உடல் நிலையை காரணம் காட்டி மீண்டும் ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளனர். இது மூன்றாவது முறையாக தாக்கல் செய்த ஜாமீன் என்பது குறிப்பிட தக்கது. அந்த மனு மீதான தீர்ப்பு வருகிற ஜனவரி 12 அன்று வழங்கப்படும் என்று சென்னை அமர்வு நீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது.