முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு கிட்டத்தட்ட 471 நாட்களுக்கு பின் நிபந்தனை ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. என்ன நிபந்தனை என்பது இன்று மாலை அறிவிக்கப்படும்.
471 நாட்களுக்கு பின் செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை ஜாமீன்
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு தொடர்பாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ம் தேதி அமலாக்கத் துறையால் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அதிரடியாக கைது செய்யப்பட்டார். இதையடுத்து புழல் சிறையில் அடைக்கப்பட்ட அவர், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
தொடர்ந்து ஜாமீன் கேட்டு செந்தில் பாலாஜி மனு தாக்கல் செய்த போதிலும் இப்பொழுது வரை ஜாமீன் வழங்காமல் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்நிலையில்,செந்தில் பாலாஜி தாக்கல் செய்த ஜாமீன் மனு மீது இன்று உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு வந்த நிலையில், தீர்ப்பு வழங்குவதாக அறிவிக்கப்பட்டது.
Also Read: விஜய்யின் தவெக முதல் மாநாடு – 17 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கிய போலீஸ்!
எனவே இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அபெய் எஸ்.ஓகா மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மாசிக் ஆகியோர் செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை ஜாமீன் அளித்து தீர்ப்பளித்தனர். மேலும் நிபந்தனைகள் என்னென்ன என்பது குறித்து இன்று மாலைக்குள் அறிவிக்கப்படும் என்றும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.
நெய்யில் கலப்படம் செய்தது உறுதி – கேரளாவில் 3 நிறுவனங்களுக்கு தடை
இலவச தையல் இயந்திரம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு
தமிழகத்தில் டாஸ்மாக் கடைக்கு விடுமுறை – எப்போது தெரியுமா?
திருச்செந்தூர் முருகன் கோவில் கந்த சஷ்டி விழா