முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு விவகாரம்: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் 14ம் தேதி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து திகார் ஜெயிலில் அடைக்கப்பட்ட நிலையில் கிட்டத்தட்ட 40-க்கும் மேற்பட்ட தடவை ஜாமீன் கேட்டு மனு அளித்துள்ளார். ஆனால் இப்பொழுது வரை அவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை.
செந்தில் பாலாஜி வழக்கு விவகாரம்: நான்கு மாதங்களில் முடிக்க நீதிமன்றம் உத்தரவு!!
அதே போல் கடைசியாக ஜாமீன் கேட்டு மனு அளித்த போது அந்த மனுவை நிராகரித்து வழக்கை மூன்று மாதங்களில் விசாரித்து முடிக்க வேண்டும் என கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை இன்னும் ஆரம்பிக்காத நிலையில், இன்று நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அதாவது, விசாரணையை முடிக்க மேலும் 4 மாதம் அவகாசம் வழங்க உத்தரவிட கோரி முதன்மை அமர்வு நீதிமன்றம் சென்னை உயர்நீதிமன்ற பதிவாளருக்கு அனுப்பிய கடிதத்தின் பேரில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டம் வழக்கின் விசாரணையை 4 மாதங்களில் முடிக்க வேண்டும் என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் மனு மீது மனு தாக்கல் செய்யாமல் விசாரணையை முடிக்க ஒத்துழைக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல்லில் 11 வயது மாணவி மயங்கி உயிரிழப்பு – மருத்துவர் சொன்ன ஷாக் தகவல்!!
அரசு பெண் ஊழியர்களுக்கு 180 நாட்கள் பேறுகால விடுமுறை
தமிழ்நாடு முதல்வரின் திறனாய்வு தேர்வு 2024
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
ரெப்கோ வங்கி நிர்வாக இயக்குனர் ஆட்சேர்ப்பு 2024 !
senthil balaji case issue – ex minister senthil balaji – tamilnadu latest news – tamilnadu minister news