அமலாக்கத் துறையால் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி விசாரணையை ஒத்தி வைக்கக் கோரி தாக்கல் செய்த மனு குறித்து நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
செந்தில் பாலாஜி:
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப்பரிமாற்ற குற்றத்திற்காக கடந்த வருடம் அமலாக்கத் துறையால் அதிரடியாக கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு எதிர்பாராத விதமாக உடல்நல குறைவு ஏற்பட்ட நிலையில் அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து நீதிமன்ற காவலில் சிறையில் வைக்கப்பட்ட செந்தில் பாலாஜி ஜாமீன் மனு கேட்டு கிட்டத்தட்ட 15 முறை நீதிமன்றத்தில் மனு அளித்தார்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
ஆனால் அமைச்சர் என்பதால் வெளியே சென்று ஆதாரங்களை அழிக்க வாய்ப்பு இருப்பதாக கூறி 15 முறையும் ஜாமீன் கொடுக்க கூடாது என்று அமலாக்கத்துறை வாதாடியது. இதனால் சில நாட்களுக்கு முன்பு சிறையில் இருந்தபடியே தன்னுடைய அமைச்சர் பணியை ராஜினாமா செய்தார். தற்போது மீண்டும் அமலாக்கத்துறை விசாரணையை தடை செய்ய கோரி செந்தில் பாலாஜி மனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று நடந்த நிலையில் அமலாக்கத்துறை தரப்பு வாதம் நிறைவடைந்தது. ஆனால் செந்தில் பாலாஜி தரப்பின் பதில் வாதங்களுக்காக அவரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து விசாரணையை பிப்.19-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.