அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் 5ஆம் தேதி சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு தொடர்பாக மத்திய அமலாக்கத் துறையால் அதிரடியாக கைது செய்யப்பட்டார். இதை தொடர்ந்து சிறைவாசம் சென்ற அவருக்கு திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவால் இதய சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் பல முறை ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்ட நிலையில், கிட்டத்தட்ட 10 வது முறையாக நீதிமன்ற காவலில் வைக்க கோர்ட் உத்தரவிட்டு இருந்தது. இது மட்டுமின்றி அமலாக்கத்துறை செந்தில் பாலாஜியின் தம்பி வீட்டிலையும் சோதனை நடத்தியது. அதில் பல ஆவணங்களை அமலாக்கத்துறை கைப்பற்றியது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
மேலும், செந்தில் பாலாஜியின் தம்பி தலைமறைவாக இருக்கும் நிலையில், அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மீண்டும் செந்தில் பாலாஜி பக்கம் திரும்பிய அமலாக்கத்துறை, தற்போது கரூர் ராமேஸ்வரப்பட்டியில் உள்ள அவரது வீட்டில் இன்று சோதனை நடத்தி வருகின்றனர். அந்த வீட்டில் அவரது தாய் இருந்து வரும் நிலையில் கேரள பதிவெண் கொண்ட வாகனத்தில் வந்த 5 அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு தொடர்பாக சோதனை செய்வதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.