பிரபல சின்னத்திரை நடிகர் யுவன் ராஜ் நேத்ரன் திடீர் மரணம் அடைந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நடிகர் யுவன் ராஜ் நேத்ரன்:
சின்னதிரையில் மருதாணி, ரஞ்சிதமே உள்ளிட்ட தொடரில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகர் யுவன் ராஜ் நேத்ரன். இவர் நடிப்பையும் தாண்டி டான்ஸர், நடிகர் என பன்முகம் கொண்டவர். அதுமட்டுமின்றி அவர் ரியாலிட்டி ஷோக்களில் அதிகமாக கலந்து கொண்டு தனது தனித்துவமான திறமையை வெளிப்படுத்தினார்.
நடிகர் யுவன் ராஜ் நேத்ரன் திடீர் மரணம் – சோகத்தில் மூழ்கிய சின்னத்திரை!
அவர் தீபா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர். அவருடைய ஒரு மகள் கனா காணும் காலங்கள் வெப் சீரிஸில் நடித்து இருந்தார். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், அவருக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது.
முதல் படத்திற்கு விஜய்யின் மகன் சஞ்சய் வாங்கும் சம்பளம்? அடேங்கப்பா இத்தனை கோடியா? புலிக்கு பொறந்தது பூனையாகுமா?
இது அவருடைய மகள் தான் சோசியல் மீடியாவில் தெரிவித்துள்ளார். எனவே இதற்காக மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருந்து வந்தார். மேலும் அவர் , விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நேற்று நேத்ரன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த செய்தி இணையத்தில் பரவிய நிலையில் சின்னத்திரை பிரபலங்கள் சோகத்தில் மூழ்கினர்.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்