Home » சினிமா » நண்பனுக்காக உதவி செய்ய வந்த தளபதி விஜய்.., வீட்டு வாசப்படியிலேயே பேசி அனுப்பி வைத்த சஞ்சீவ்.., நடந்தது என்ன?

நண்பனுக்காக உதவி செய்ய வந்த தளபதி விஜய்.., வீட்டு வாசப்படியிலேயே பேசி அனுப்பி வைத்த சஞ்சீவ்.., நடந்தது என்ன?

நண்பனுக்காக உதவி செய்ய வந்த தளபதி விஜய்.., வீட்டு வாசப்படியிலேயே பேசி அனுப்பி வைத்த சஞ்சீவ்.., நடந்தது என்ன?

தளபதி விஜய் சஞ்சீவ்

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கொடிகட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவர் நடிப்பில் தற்போது கோட் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படம் விஜய்யின் பிறந்தநாளில் வெளியாகும்  என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இப்படம் தீபாவளியை முன்னிட்டு வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் விஜய் அரசியலில் இறங்கிய நிலையில் தளபதி 69 படத்தோட தனது சினிமா கெரியரை முடித்து கொள்ள இருப்பதாக சமீபத்தில் அறிவித்தார். இதனால் ரசிகர்கள் அனைவரும் சோகத்தில் இருந்து வருகின்றனர். இந்நிலையில் விஜய்யின் நெருங்கிய நண்பரும் சீரியல் நடிகருமான சஞ்சீவ் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் உதவி செய்ய வந்த விஜய்யை வாசலோடு அனுப்பிவிட்டேன் என்று கூறியுள்ளார்.

அதில் அவர்,” கொரோனா டைம்ல எனக்கு பாசிட்டிவ் என்று வந்த போது என்னுடைய குடும்பத்தை மாமனார் வீட்டிற்கு அனுப்பி விட்டு, நான் தனியாக இருந்தேன். அப்போது எதார்த்தமாக கால் செய்த விஜய்யிடம் கூறினேன். அப்போது எனக்காக சாப்பாடு கொண்டு வந்த விஜய்யை, தோட்டக்காரனிடம் கொடுத்து விட்டு நீ கிளம்பு, வீட்டுக்குள்ள வராதே என்று கூறினேன். அப்போது விஜய்யும் கொடுத்துவிட்டு அப்படியே கிளம்பி சென்றார். எனக்கு அது கொஞ்சம் கஷ்டமாக இருந்தாலும், என் நண்பன் தானே என்று மனதை தேத்தி கொண்டேன் என்று கூறியுள்ளார்.  தற்போது அது வைரலாக பரவி வருகிறது.

உனக்கு என் தங்கச்சி கேக்குதா?.. காதலனை வெட்டி கொன்ற காதலி அண்ணன்.., தொடரும் ஆணவப் படுகொலை – 5 பேர் கைது!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top