பிரபல நடிகர் ஷாமின் அஸ்திரம் திரைப்படம் எப்படி இருக்கு என்பது குறித்து படத்தின் திரைவிமர்சனம் இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Asthram Movie:
தென்னிந்திய தமிழ் சினிமாவில் நடிக்க ஆரம்பித்த நாளில் இருந்து எப்படியாவது ஒரு சோலோ ஹிட் படத்தை கொடுத்து விட வேண்டும் என்று போராடி வருபவர் தான் நடிகர் ஷாம். அந்த வகையில் அவர் சோலோவாக நடித்த அஸ்திரம் திரைப்படம் இன்று உலகமெங்கும் வெளியாகியுள்ளது. இப்படம் சூப்பர் ஹிட் அடிக்குமா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும். இந்நிலையில் அஸ்திரம் படத்தின் திரைவிமர்சனம் குறித்து இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம் வாங்க.
ஷாமின் அஸ்திரம் திரைப்படம் எப்படி இருக்கு?.., நடிப்புக்கு தீனி போட்டாரா?
திரைவிமர்சனம்:
கொடைக்கானலில் இன்ஸ்பெக்டர் ஆக இருந்து வருகிறார் ஷாம். படத்தின் தொடக்கத்திலேயே மக்கள் கூட்டம் கூடும் பார்க்-இல் ஒரு நபர் கத்தியை வைத்து தன் வயிற்றில் தானே குத்திக் கொண்டு இறந்து போகிறார். இந்த தற்கொலை கேஸை ஷாம் கையில் எடுக்கிறார், இந்த சம்பவம் போல் ஏற்கனவே மதுரை மற்றும் சென்னை பகுதியில் நடந்துள்ளது. இதனால் தான் இந்த கேஸை அவர் எடுக்கிறார். இந்த தற்கொலைக்கு பின்னாடி யார் அவர்களை தூண்டுகிறார்கள் என்றும், வேறு எதுவும் காரணம் இருக்குமாம் என்றும் இதில் உள்ள மர்மத்தை ஷாம் கண்டுபிடிக்க முயற்சி செய்கிறார். எனவே அவரின் முயற்சி வெற்றிக்கு வழிவகுத்ததா இல்லையா என்பதே படத்தோட மீதிக்கதை.
கிளாப்ஸ்:
- படத்தின் முதல் பாதி விறுவிறுப்புக்கு பஞ்சமில்லை
- இண்டெர்வெல் வரை சுவாரஸ்யம் குறையவே இல்லை.
- நீண்ட வருடங்களுக்கு பிறகு ஷாம் நடிப்புக்கு தீனி போட்டுள்ளார்.
- இன்வெஸ்டிகேஷன் கதைக்களம் சூப்பர்.
- மற்ற நடிகர்களின் நடிப்பும் அற்புதம்.
- ப்ளாஷ்பேக்கில் வந்த சிறுவன் நடிப்பு நன்று.
- படத்திற்கு கூடுதல் பிளசாக இசை அமைந்துள்ளது.
விஷால் மச்சான் மீது மோசடி புகார்.., கோடிக்கணக்கில் அபேஸ்.., சிபிஐ அதிரடி நடவடிக்கை!!
பல்ப்ஸ்:
- இரண்டாம் பாதியில் விறுவிறுப்பாக இல்லை.
- பிளாஷ்பேக் கொஞ்சம் இழுவையாக உள்ளது.
- கிளைமாக்ஸ் சீன இன்னும் கொஞ்சம் நன்றாக எடுத்திருக்கலாம்.
எனவே மொத்தத்தில் குறைந்த பட்ஜெட்டில் ஒரு டீசண்ட் திரில்லர் படம் பார்த்த அனுபவத்தை தரும் இந்த அஸ்திரம் திரைப்படம். மேலும் இப்படத்திற்கு ரேட்டிங் 2.75/5 கொடுக்கலாம்.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
உலக சாதனை படைத்த த்ரிஷா திரைப்படம்.., எந்த படம் தெரியுமா? ஹீரோ இந்த முன்னணி நடிகர் தான்!
இந்த புகைப்படத்தில் உள்ள குழந்தை யார் தெரியுமா? ரூ.1000 வசூலை ஈட்டிய சென்சேஷனல் இயக்குனர்!!
குட் பேட் அக்லி படத்தின் வில்லன் யார் தெரியுமா? அப்படி போடு.., இது தான் நிஜமான OG சம்பவம்!!
குட் நியூஸ் சொல்லப்போகும் கீர்த்தி சுரேஷ்.., என்னனு தெரியுமா?