
விஜய் டிவியின் சூப்பர் ஹிட் ஷோவான குக் வித் கோமாளி சீசன் 6 விரைவில் ஆரம்பம் என்று CWC பிரபலம் ஒருவர் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
குக் வித் கோமாளி:
விஜய் டிவியில் பிக்பாஸ் ஷோவுக்கு பிறகு மக்கள் கொண்டாடும் ஒரு ரியாலிட்டி ஷோ என்றால் அது குக் வித் கோமாளி தான். பல வருடங்களாக ஒளிபரப்பாகி வரும் இந்த ஷோ மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த ஆண்டு குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் பல மாற்றங்கள் இருந்தது. அதன்படி, செஃப் தாமு மற்றும் மாதம்பட்டி ரங்கராஜ் தான் தலைமை வகித்து வந்தனர்.
குக் வித் கோமாளி சீசன் 6 விரைவில் ஆரம்பம்.., CWC பிரபலம் கொடுத்த சூப்பர் தகவல்!!
அதுமட்டுமின்றி புது புது கோமாளிகளை களமிறக்கி இருந்தனர். மேலும் விஜே ரக்ஷனுடன் சேர்ந்து விஜே மணிமேகலை தொகுத்து வழங்கி வந்தார். இதில் பாதியில் போட்டியாளராக கலந்து கொண்ட பிரியங்காவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஷோவை விட்டு விலகினார். இருந்தாலும் இந்த சீசனில் டைட்டில் வின்னராக பிரியங்கா தேர்வு செய்யப்பட்டிருந்தார். இதனை தொடர்ந்து அடுத்த சீசன் எப்போது என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ஷாமின் அஸ்திரம் திரைப்படம் எப்படி இருக்கு?.., நடிப்புக்கு தீனி போட்டாரா?
இந்நிலையில் CWC 6 எப்போது என்பது குறித்து குக் வித் கோமாளி சீசன் 2 ரன்னர் அப் இடத்தை பிடித்த ஷகீலா பகிர்ந்துள்ளார். அதாவது அவர் கூறியதாவது, ” CWC 6 வருகிற ஏப்ரல் மாதம் இறுதி அல்லது மே முதல் வாரத்தில் தொடங்கும் என்று மாதம்பட்டி ரங்கராஜ் கூறினார் என்று தெரிவித்துள்ளார். சமீபத்தில் கேட்டரிங் விஷயத்திற்காக அவரை சந்தித்த போது என்னிடம் கூறினார். இதை வைத்து பார்க்கும் பொழுது விரைவில் CWC 6 தொடங்க போகிறது. இந்த செய்தியை கேட்ட ரசிகர்கள் படு குஷியில் இருந்து வருகிறார்கள்.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
உலக சாதனை படைத்த த்ரிஷா திரைப்படம்.., எந்த படம் தெரியுமா? ஹீரோ இந்த முன்னணி நடிகர் தான்!
இந்த புகைப்படத்தில் உள்ள குழந்தை யார் தெரியுமா? ரூ.1000 வசூலை ஈட்டிய சென்சேஷனல் இயக்குனர்!!
குட் பேட் அக்லி படத்தின் வில்லன் யார் தெரியுமா? அப்படி போடு.., இது தான் நிஜமான OG சம்பவம்!!
குட் நியூஸ் சொல்லப்போகும் கீர்த்தி சுரேஷ்.., என்னனு தெரியுமா?