Breaking news மூன்று நாட்கள் உச்சத்தில் இருந்த பங்குச்சந்தை திடீரென குறைவு: கடந்த மூன்று நாட்களாக பங்குச் சந்தை தொடர்ந்து ஏற்றத்தில் இருந்து வந்ததால் முதலீட்டாளர்கள் சந்தோசமாக இருந்து வந்த நிலையில், தற்போது இன்று திடீரென பங்கு சந்தை குறைந்து காணப்பட்டுள்ளது. அதாவது இன்று காலை முதல் மும்பை பங்குச் சந்தை வர்த்தகத்தை தொடங்கியதில் இருந்து பங்கு சந்தை சரிந்து உள்ளது. சற்று முன் சென்செக்ஸ் 163 புள்ளிகள் குறைந்து 77 ஆயிரத்து 199 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. ஆனால் அதே தேசிய பங்குச் சந்தை நிப்டி வெறும் 24 புள்ளிகள் குறைந்து 23 ஆயிரத்து 432 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
மூன்று நாட்கள் உச்சத்தில் இருந்த பங்குச்சந்தை திடீரென குறைவு .. இன்றைய நிப்டி, சென்செக்ஸ் நிலவரம் இதோ!
உடனுக்குடன் செய்திகளை அறிய Watsapp Group -யை பின் தொடருங்கள்!
மேலும் கடந்த 3 நாட்களில் பங்குச்சந்தை உயர்ந்த நிலையில், இன்று சிறிய அளவில் குறைந்ததால் முதலீட்டாளர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படுத்தாது என்று பங்குச் சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி இன்று மதியம் மீண்டும் பங்கு சந்தை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. குறிப்பாக இன்றைய பங்குச் சந்தை வர்த்தகத்தில் ஹெச்சிஎல் டெக்னாலஜி, ஹெச்டிஎஃப்சி வங்கி , ஆக்சிஸ் வங்கி, பஜாஜ் பைனான்ஸ், ஐசிஐசி வங்கி ஆகிய பங்குகள் குறைந்துள்ளதாகவும் மற்றும் லீவர், ஐடிசி உள்ளிட்ட பங்குகள் உயர்ந்த உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தெலங்கானாவில் நிறுத்தி வைக்கப்பட்ட ஹைதராபாத் விரைவு ரயிலில் திடீரென தீ விபத்து…, பலி எண்ணிக்கை?
சமீபத்திய செய்திகள் – இதையும் மறக்கமாக படிங்க
நீட் தேர்வில் முறைகேடு செய்ததை ஒப்புக் கொண்ட மாணவர்
இந்தியாவின் முதல் CNG பைக்கை அறிமுகப்படுத்தும் பஜாஜ் நிறுவனம்
அலங்கார நகைகள் தயாரிப்பு இலவச பயிற்சி முகாம்