Home » செய்திகள் » கேரள ஷரோன் ராஜ் கொலை வழக்கு விவகாரம்.., குற்றவாளி கிரீஷ்மாவுக்கு தூக்கு தண்டனை!!

கேரள ஷரோன் ராஜ் கொலை வழக்கு விவகாரம்.., குற்றவாளி கிரீஷ்மாவுக்கு தூக்கு தண்டனை!!

கேரள ஷரோன் ராஜ் கொலை வழக்கு விவகாரம்.., குற்றவாளி கிரீஷ்மாவுக்கு தூக்கு தண்டனை!!

உலகையே உலுக்கிய கேரள ஷரோன் ராஜ் கொலை வழக்கு விவகாரம் தொடர்பாக நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது.

கடந்த 2022ஆம் ஆண்டு, உலகையே உலுக்கிய ஒரு சம்பவம் என்றால் அது ஷரோன் ராஜ் கொலை தான். அதாவது காதலன்  ஷரோனுக்குக் ஆயுர்வேத மருந்து என்று கூறி விஷத்தை தண்ணீரில் கலந்து கொடுத்து காதலி கிரீஷ்மா கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது குறித்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில், ஷரோன் ராஜ் கொலை வழக்கில், குற்றம்சாட்டப்பட்டு இருந்த கிரீஷ்மா மற்றும் அவரது உறவினர் ஆகியோர் குற்றவாளிகள் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து இந்த வழக்கு நீதிமன்றத்திற்கு சென்ற நிலையில், கிரீஷ்மாவின் தாய்க்கு எதிராக போதிய ஆதாரங்கள் இல்லாததால் அவரை விடுதலை செய்தும் விசாரணை நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்திருந்தது.

இந்த நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்துள்ளது. இதில் வாக்குவாதம் காரசாரமாக நடைபெற்ற நிலையில் நீதிபதி அதிரடி தீர்ப்பை வழங்கினார். அதாவது, இந்த விவகாரம் தொடர்பாக குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டிருக்கும் இருவருக்குமான தண்டனை விவரத்தை நீதிமன்றம் இன்று பிறப்பித்துள்ளது. அதன்படி, இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கிரீஷ்மாவுக்கு தூக்கு தண்டனையும், மற்றும் கிரீஷ்மாவின் தாய்மாமன் நிர்மல் குமாருக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. 

உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்

தமிழ்நாட்டில் நாளை (21.01.2025) மின்தடை பகுதிகள்! மின்சாரத்துறை அதிகாரபூர்வ அறிவிப்பு!

ஐதராபாத் மெட்ரோ நிர்வாகம் சாதனை., 13 கி.மீ. தொலைவை வெறும் 13 நிமிடத்தில் கடந்த இதயம்!!

தவெக தலைவர் விஜய் ஜனவரி 20ம் தேதி பரந்தூர் செல்கிறார்.., அனுமதி வழங்கிய காவல்துறை!!

மதுரையில் சுரங்க மெட்ரோ ரயில் நிலையம்.., எந்த ஏரியாவில் தெரியுமா?

டாடா சியாராவின் ICE மற்றும் EV புதிய மாடல்.., என்னென்ன அம்சங்கள் இருக்கிறது தெரியுமா?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top