சிவனை வழிபாடும் போது நாம் செய்யக்கூடாதவை. நாம் வணங்கும் கடவுள்களில் முதன்மையானவர் சிவ பெருமான். இதன் அடிப்படையில் அதிக எண்ணிக்கையிலான பக்தர்கள் சிவ பெருமானை வணங்குவதில் ஆர்வம் காட்டுவர் என்பது குறிப்பிடத்தக்கது. பிரதோஷம் மற்றும் சிவராத்திரி போன்ற தினங்கள் சிவபெருமானை வணங்குவதற்கு உகந்த நாட்களாகும். இதன் அடிப்படையில் நாம் சிவாலயங்களுக்கு சென்று வழிபடும் போது சில தவறுகளை செய்யக்கூடாது.
சிவனை வழிபாடும் போது நாம் செய்யக்கூடாதவை
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
சிவன் கோவிலில் செய்யக்கூடாதவை :
சிவப்பிரியனான நந்தி பகவானை வழிபடுவதற்கு முன் நாம் சிவபெருமானை வழிபடக்கூடாது.
சண்டிகேஸ்வரரை கைதட்டி வணங்கக்கூடாது.
கோவிலில் உள்ள கொடிமரத்தை தவிர்த்து வேறு எங்கும் சாஷ்டாங்கமாக விழுந்து வாங்ககூடாது.
பலிபீடம், நந்தி மற்றும் கோவில் கோபுரத்தின் நிழலை நாம் மிதிக்கக்கூடாது.
அட்சய திருதியை 2024 ! தங்கம் வாங்க வேண்டாம்… தானம் செய்யுங்கள் அதுவே வரலாறு !
மேலும் சிவலிங்கத்துக்கு நந்திக்கும் இடையில் சென்று வழிபடக்கூடாது.
நடந்து கொண்டே நெற்றியில் திருநீரு இடக்கூடாது.
மேலும் ஸ்தல விருட்சமான வில்வத்தை பறிக்கக்கூடாது.