சிவராத்திரி மற்றும் ஸ்ரீ ராமநவமி போன்ற பண்டிகைகளுக்கு பொது விடுமுறை அறிவிக்கும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சிவராத்திரி மற்றும் ஸ்ரீ ராமநவமி
ஒவ்வொரு மாதமும் பல்வேறு வித பண்டிகைகளை இந்துக்கள் கொண்டாடிவருகின்றனர். பொங்கல், தீபாவளி, விநாயகர் சதுர்த்தி, ஆயுதபூஜை போன்ற ஏராளமான பண்டிகைகள் வந்த வண்ணம் உள்ளன. இதில் தீபாவளி, விநாயகர் சதுர்த்தி பண்டிகை இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகையும் வெவ்வேறு பெயர்களில் சில மாநிலங்களில் கொண்டாடப்படுகிறது.
புதிய எச்சரிக்கை வாசகத்தை வெளியிட்ட கூகுள் incognito mode… பயனாளர்கள் ஜாக்கிரதை ….
இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலங்களில் ஒவ்வொரு பண்டிகைகள் சிறப்பு வாய்ந்ததாக உள்ளது மற்றும் மாறுபட்டதாகவும் உள்ளது. அதனால் அந்த மாநிலங்களுக்கு தகுந்தவாறு விடுமுறை விடப்படுகிறது. அதேபோல் இந்த சிவராத்திரி மற்றும் ராமநவமியும் சிலர் கொண்டாடுகின்றனர். சிலர் கோவிலுக்கு செல்கின்றனர்.
இந்த பண்டிகை நாட்களில் பொது விடுமுறை அளிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட முடியாது என சென்னை உயர்நீதி மன்றம் அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது.