சுப்மன் கில்லுக்கு டெங்கு உறுதியானது. இந்திய கிரிக்கெட் வீரருக்கு டெங்கு. இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய வீரர் சுப்மன் கில்லு. இவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதியாகி உள்ளது. அக்டோபர் 8ம் தேதியில் நடைபெற இருக்கின்ற உலகக்கோப்பை போட்டியில் இவர் கலந்து கொள்வாரா என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது.
சுப்மன் கில்லுக்கு டெங்கு உறுதியானது ! ஆஸிக்கு எதிரான முதல் போட்டியில் பங்கேற்பது சந்தேகம் !
உலகக்கோப்பையில் இந்தியா :
13வது 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் நேற்று தொடக்கி உள்ளது. நேற்றைய முதல் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. இந்திய அணி தன் முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவுடன் மோத இருக்கின்றது. இப்போட்டியானது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வைத்து நடைபெற உள்ளது. இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் விளையாட இருக்கின்றது.
JOIN WHATSAPP | CLICK HERE |
கிரிக்கெட் வீரருக்கு டெங்கு :
இன்னும் 2 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் இந்திய அணியின் முக்கிய வீரராக இருப்பவர் சுப்மன் கில்லு. இவரே போட்டியின் துவக்க ஆட்டக்காரராய் இருக்கின்றார். அதிக ரன்கள் எடுப்பர் என்ற எதிர்பார்ப்பு இவர் மேல் இருந்தது. போட்டியில் கலந்து கொள்ள இவர் கடந்த புதன் கிழமை தான் கேரளாவில் இருந்து சென்னை வந்தார்.
உடல் நிலை சரியில்லாமல் ஓய்விலேயே இருந்துள்ளார். மருத்துவ பரிசோதனை இறுதியில் தற்போது பரவி வரும் டெங்கு காய்ச்சல் இவருக்கு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. தற்போது இவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
அனைத்து வீரர்களுக்கும் டெங்கு பரிசோதனை :
தமிழகத்தில் தற்போது டெங்கு காய்ச்சல் பரவலாக இருக்கின்றது. முதலில் சுப்மன் கில்லுக்கு உறுதி செய்யப்பட்ட நிலையில் இந்திய அணியில் இருக்கும் அனைத்து கிரிக்கெட் வீரர்களுக்கும் பரிசோதனை செய்யப்பட உள்ளது.
தொடங்கியது உலகக்கோப்பை 2023 ! முதல் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் !
போட்டியில் கலந்து கொள்வாரா :
சுப்மன் கில்லுவிற்கு டெங்கு உறுதி செய்யப்பதால் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருக்கும் போட்டியில் இவர் கலந்து கொள்வாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஆனால் ஐசிசி சார்பில் எந்த ஒரு அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் வெளியாகவில்லை.
இவருக்கு பதில் இவர் :
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் போட்டியில் துவக்க வீரராக கில்லு களம் இறங்க இருந்ததார். இவருக்கு டெங்கு காய்ச்சல் என்பதால் இவருக்கு பதில் இஷன் கிஷ்கான் களம் இறங்குவர் என்று எதிர் பார்க்கப்படுகின்றது. போட்டி தொடங்குவதர்க்கு 1 மணி நேரம் முன் தான் துவக்க ஆட்டக்காரர் யார் என்பது நமக்குத் தெரியும்.
கில்லு முதல் போட்டியில் அதிரடியாக களம் இறங்குவார் என்று எதிர்பார்த்த நிலையில் தற்போது இவருக்கு டெங்கு என்பது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது. இது இந்திய அணிக்கு பின்னடைவாக இருக்கலாம்.