SIDBI சார்பில் இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி ஆட்சேர்ப்பு 2024 மூலம் தலைமை பொருளாதார நிபுணர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. மேலும் தெரிவிக்கப்பட்ட இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் வேட்பாளர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து தகுதிகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதா என்பதை படித்து தெரிந்து கொண்ட பிறகு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அந்த வகையில் அடிப்படை தகுதிகள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை பற்றிய முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி ஆட்சேர்ப்பு 2024
JOIN WHATSAPP TO GET BANK JOB NOTIFICATION
நிறுவனத்தின் பெயர் :
இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி
வகை :
வங்கி வேலைவாய்ப்பு
காலிப்பணியிடங்களின் பெயர் :
தலைமை பொருளாதார நிபுணர்
சம்பளம் :
மாத சம்பளமானது நிறுவனத்தின் CTC, விண்ணப்பதாரரின் தகுதி, அனுபவம், தற்போதுள்ள சந்தை மதிப்பு, முந்தைய ஊதிய விவரம் போன்றவற்றின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படும்.
கல்வி தகுதி :
மேற்கண்ட பதவிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்திலிருந்து Post Graduate in Economics துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
குறைந்தபட்ச வயது வரம்பு : 45 ஆண்டுகள்
அதிகபட்ச வயது வரம்பு : 57 ஆண்டுகள்
அரசு விதிகளின் படி SC / ST / OBC / EWS / PwBD பிரிவினருக்கான வயது தளர்வு பொருந்தும்.
பணியமர்த்தப்படும் இடம் :
மும்பை – மகாராஷ்டிரா
விண்ணப்பிக்கும் முறை :
இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி சார்பில் தெரிவிக்கப்பட்ட தலைமை பொருளாதார நிபுணர் பணிகளுக்கு அதிகாரப்பூர்வ இணையதளத்திலிருந்து விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்த பிறகு அதனை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து அனுப்பி E – Mail மூலம் அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
E – Mail முகவரி :
recruitment@sidbi.in
முக்கிய தேதிகள் :
E – Mail மூலம் விண்ணப்பத்தை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி : 06.09.2024
E – Mail மூலம் விண்ணப்பத்தை சமர்பிப்பதிற்கான இறுதி தேதி : 26.09.2024
சமர்ப்பிக்க வேண்டிய சான்றிதழ்கள் :
விண்ணப்பங்களுடன் சுய சான்றொப்பமிடப்பட்ட நகல்களுடன் இணைக்கப்பட வேண்டும்.
அடையாளச் சான்று தொடர்புடைய சான்றிதழ்(கள்) / ஆவணங்கள்,
முகவரி, வயது, கல்வித் தகுதி (கல்வி சான்றிதழ்கள்/மதிப்பீடுகள்),
பணி அனுபவம்,
சாதிச் சான்றிதழ்,
PwBD விண்ணப்பப் படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி தேவையான சான்றிதழ் போன்றவை இணைக்கப்பட வேண்டும்.
தமிழ்நாடு வருமான வரித்துறை வேலைவாய்ப்பு 2024 ! 10ம் வகுப்பு தேர்ச்சி போதும், 25 காலியிடம் அறிவிப்பு !
வேலையின் நோக்கம் :
சிறந்த நிர்வாகத்திற்கான மூலோபாய உள்ளீடுகள்.
மேக்ரோ பொருளாதாரம் மற்றும் துறைசார் பகுப்பாய்வு
கொள்கை விளக்கம் மற்றும் பிரதிநிதித்துவப்படுத்துதல்
ஆராய்ச்சி மற்றும் தரவுத்தள மேலாண்மையை மேம்படுத்துதல்
நிதி மற்றும் சந்தை கண்காணிப்பு பணிகள் போன்றவை
தேர்வு செய்யும் முறை :
தேர்வு பட்டியல் மற்றும் தனிப்பட்ட நேர்காணலானது பொருத்தமான தேதியில் ஆன்லைனில் மூலம் நடத்தப்பட்டு தேர்ந்தெடுக்கப்படுவர். மேலும் இதற்கான அறிவிப்பு சரியான நேரத்தில் தெரிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
விண்ணப்பக்கட்டணம் :
வேட்பாளர்களுக்கு எந்தவொரு விண்ணப்பக்கட்டணமும் கிடையாது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | view |
அதிகாரப்பூர்வ இணையதளம் | click here |
குறிப்பு :
விண்ணப்பிக்கும் வேட்பாளர் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்.
அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள காலியிடங்களின் எண்ணிக்கை தற்காலிகமானது மட்டுமே மேலும் இது மாறுபட வாய்ப்புள்ளது.
நேர்காணலுக்கான அறிவிப்பு / அழைப்புக் கடிதம் போன்றவை மின்னஞ்சல் மூலம் மட்டுமே அனுப்பப்படும் அல்லது வங்கியின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். வேறு எந்த முறையும் பின்பற்றப்படமாட்டாது.
இதன் காரணமாக விண்ணப்பதாரர்கள் வேலை செய்யும் மின்னஞ்சல் ஐடி மற்றும் மொபைல் எண்ணை பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
அத்துடன் நேர்காணலானது ஆன்லைன் முறையின் முலம் மட்டுமே நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்