நடிகர் சித்தார்த்
சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் தான் சித்தார்த். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான சித்தா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. தற்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் புதிய படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் அவர் பிரபல நடிகை அதிதி ராவ் என்பவரை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருகிறார். தான் எங்கு சென்றாலும் அதிதி ராவ்-வை அழைத்து செல்கிறார். அப்போது எடுக்கப்படும் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேலும் அவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள போகிறார்கள் என்று கூட செய்திகள் பரவி வந்தது. இந்நிலையில் இன்று காலை நடிகர் சித்தார்த் – அதிதி ராவ் திருமணம் ரகசியமாக நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது தெலுங்கானா மாநிலத்தில் ஸ்ரீரங்கபுரம் கோவிலில் இவர்களுடைய திருமணம் நடந்துள்ளதாம். நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே இந்த கல்யாணத்தில் பங்கேற்று உள்ளதாக தெலுங்கு வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.