கோவை மருதமலை கோவிலில் வெள்ளி வேல் திருட்டு! உண்மை நிலவரம் என்ன!!
மருதமலை கோவிலில் வெள்ளி வேல் திருட்டு: கோவை மாவட்டம், பேரூர் வட்டம், கோவை நகரிலிருந்து சுமார் 15 கி.மீ தொலைவில் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாக உள்ள மருதமலையில் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் இயற்கை எழில் சூழ கடல் மட்டத்திலிருந்து சுமார் 741 மீட்டர் உயரத்தில் ஏழு நிலை இராஜகோபுரத்துடன் அழகுற அமையப் பெற்றுள்ளது.
கோவை மருதமலை கோவில்
இத்தலத்து இறைவன் நின்ற திருக்கோலத்தில் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி என்ற திருநாமத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். இத்தலத்துக்கு அருகில் உள்ள வெள்ளிங்கிரியை சிவன் உருவாகவும், நீலிமலையை அம்மை உருவாகவும், இம்மருதமலையை முருகன் உருவாகவும் என மும்மலையையும் சேர்த்து சோமாஸ்கந்த மூர்த்தமாக பேரூர் புராணம் குறிப்பிடுகின்றது.
முருகன் ஏழாம் படை வீடு
முருகப் பெருமானுக்கு அறுபடை வீடுகள் உள்ளது இலக்கியத்தில் போற்றப்படுகிறது. முருக பக்தர்களால் இது ஏழாம் படை வீடு என்று அழைக்கப்படுவதும் உண்டு.
மேலும், பேரூரில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானை பூஜித்து குசத்துவராசன் என்னும் அரசன் இரண்டு பெண் குழந்தைகளைப் பெற்றெடுத்தான். பின்னர் இறைவனின் ஆணைப்படி மருதமலையானை வழிபட்டு மகனைப் பெற்றான் என்பதைப் பேரூர் புராணத்தில் உள்ளது.
Also Read: ஊட்டி மற்றும் கொடைக்கானல் செல்ல இ-பாஸ் பெறுவது எப்படி? – முழு விவரம் இதோ!
இத்திருக்கோயில் அமைந்துள்ள மலையில் மருத மரங்கள் மிகுதியாக காணப்படுவதால் இம்மலை மருதமலை என வழங்கப்படுகிறது. இத்தலத்தின் தலவிருட்சமாக மருதமரம் விளங்குகின்றது.
மருதமலை கோவில் கும்பாபிஷேகம் 2025
இந்த கோவிலில் கும்பாபிஷேகம் பணிகள் கடந்த சில ஆண்டுகள் நடந்து வந்தது. அந்த திருப்பணிகள் முழுவதும் முடிவடைந்த நிலையில் நாளை காலை குடமுழு நடைபெறுகிறது. இந்நிலையில் இன்று இங்கு ஒரு வெள்ளி வேல் ஒன்று திருடபட்டுள்ளது என்று செய்தி பரவியது.
கோவை மருதமலை கோவிலில் வேல் திருட்டு
சாமியார் வேடம் அணிந்த ஒருவர் வெள்ளி வேலை திருடி செல்லும் காட்சி கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. மேலும் திருடப்பட்ட வேலின் மதிப்பு சுமார் 4 லட்சம் என்று சொல்லப்படுகிறது.
நாளை குடமுழுக்கை காண செல்லும் பக்தர்கள் கவனமுடனும் பாதுகாப்பாகவும் சாமி தரிசனம் செய்யுங்கள்.
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா!!!
வீர வேல் முருகனுக்கு அரோகரா!!
Marudhamalai Murugan Temple Official Website
உண்மை நிலவரம் என்ன?
வெள்ளி வேல் திருடப்பட்டது மருதமலை முருகன் கோவிலில் அல்ல. அடிவாரத்தில் உள்ள வேல் கோட்ட தியான மண்டபத்தில் திருடப்பட்டுள்ளது. அந்த மண்டபம் தனியாருக்கு சொந்தமானது. இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமானது அல்ல. அதனால் கோவில் வேல் திருடு போகவில்லை என்று இணை ஆணையர் விளக்கம் அளித்துள்ளார்.