இதுவரை நடிக்காத ரோலில் நடிக்கும் நடிகர் சிம்பு.., ஹீரோவை விட வில்லனுக்கு தான் மவுஸ் அதிகமா? வெளியான முக்கிய தகவல்!!!இதுவரை நடிக்காத ரோலில் நடிக்கும் நடிகர் சிம்பு.., ஹீரோவை விட வில்லனுக்கு தான் மவுஸ் அதிகமா? வெளியான முக்கிய தகவல்!!!

தமிழ் சினிமாவில் பாடகர், பாடலாசிரியர், இயக்குநர் மற்றும் நடிகர் என பன்முக திறன்களை கொண்டவர் தான் சிலம்பரசன். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான பத்து தல திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் கமல்ஹாசன் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் உருவாக இருக்கும் சிம்பு 48 படத்தில் நடிக்க இருக்கிறார். வரலாற்று தழுவி கதை இருப்பதால் அதற்காக சிம்பு தன்னை தயார்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.

சிம்பு பிறந்தநாள் முன்னிட்டு வெளியான போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. அதில் இரண்டு சிம்பு இருப்பது போன்றும் ஒருவொருக்கொருவர் முரட்டுத்தனமாக முறைப்பது போல் போஸ்டர் இருந்தது. இந்நிலையில் அந்த போஸ்டரில் இருக்கும் ஒரு சிம்பு திருநங்கையாக நடிக்கிறாராம். அதற்காக சிம்பு தன்னுடைய உடல் பாவனையை மாற்றி திருநங்கையாக இருக்க பயிற்சி செய்து வருகிறாராம். இந்த தகவலை பார்த்து சிம்பு ரசிகர்கள் பல கருத்துக்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார்கள். 

மகளை நம்பி மோசம் போன சூப்பர் ஸ்டார்.., பாதாளத்தில் இறங்கிய மார்க்கெட்.., மறுபடியும் முதல இருந்தா? 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *