இந்த ஆண்டில் சனிப்பெயர்ச்சி திருக்கணித முறைப்படி நாளை (29.3.2025) நடைபெற இருக்கிறது. அதோடு, இந்த வருடம் முக்கியமான கிரங்களான குரு மற்றும் ராகு-கேது பெயர்ச்சியும் நிகழ இருக்கிறது. மேலும், சிம்ம ராசிக்கு 8-ம் இடத்தில் சனி அமர்ந்து பலன் தரப்போகிறார். எனவே சிம்ம ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்க போகிறது என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
சிம்மம் சனிப்பெயர்ச்சி 2025.., அதிர்ஷ்டத்தால் வரும் செல்வம்.., பலன்கள் பரிகாரங்கள் இதோ!!
சிம்ம ராசிக்காரர்களுக்கான பலன்கள்:
சனியின் ஆதிக்கத்தால் சில தேவையற்ற பிரச்சனைகள் உருவாகலாம். உத்தியோகத்தில் உங்கள் திறமைக்கு ஏற்ப உயர்வுகள் மற்றும் ஊதிய உயர்வு கிடைக்கும்.
அயல்நாட்டுப் வேலையில் சேர கூடும். வெளி உணவுகளை தவிர்த்து விடுங்கள். இந்த ராசிக்காரர்கள், திருமணம் உள்ளிட்ட சுப காரியங்களைச் சற்றுத் தள்ளி போடுவது நல்லது.
குறிப்பாக ஆணோ பெண்ணோ ஜாதகத்தை நன்கு ஆராய்ந்து முடிவு எடுத்தால் நல்லது. பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்க வேண்டும்.
புதிய நட்பை தேர்ந்தெடுப்பதில் கவனம் தேவை. விலை உயர்ந்த பொருட்களை பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
வியாபாரம், தொழில் உள்ளிட்டவைகளில் நற்பலன்கள் கிடைக்கும். சில உடல் உபாதைகள் ஏற்படலாம். புதிய முதலீடுகளில் ஈடுபடாமல் இருந்தால் நல்லது.
பூர்வீகச் சொத்தில் ஏதாவது பிரச்சனைகள் வந்து சரியாகும். பிறமொழி மனிதர்களிடம் எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.
சிம்மம் சனிப்பெயர்ச்சி பரிகாரங்கள்:
தினந்தோறும் உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் சிவன் கோவில் சென்று சிவதரிசனம் செய்து வரவும்.
அல்லது
நரசிம்மரை வணங்கி வழிபடலாம்.
ருத்ராட்சம் மாலை பயன்கள் ! ஏக முகம் முதல் 14ம் முகம் வரை தரும் நன்மைகள் எத்தனை தெரியுமா ?
திருப்பதி மொட்டை: நாம் செலுத்தும் முடி காணிக்கை என்னவாகிறது தெரியுமா?
அக்னி நட்சத்திரம் | அந்த 21 நாட்கள் வெயில் அதிகம் இருக்க காரணம் தெரியுமா.. இதோ முழு வரலாறு !