2024 -205 கல்வியாண்டு முதல் கல்லூரிகளுக்கு ஒரே நேரத்தில் தேர்வு முடிவு. தமிழகத்தில் உள்ள அனைத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு ஒரே நேரத்தில் செமஸ்டர் தேர்வுகள் நடக்கும். தேர்வு முடிவுகளும் ஒரே நேரத்தில் வெளியாகும் என உயர்கல்வி துறை அறிவித்துள்ளது.
கல்லூரிகளுக்கு ஒரே நேரத்தில் தேர்வு முடிவு
தமிழகத்தில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களின் கீழ் நடக்கும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் வேலைநாட்கள், தேர்வு நாட்கள், செமஸ்டர் விடுமுறை நாட்கள் எல்லாம் வெவ்வேறு நாட்களில் நடைபெறுகின்றன. இதனால் கல்லூரிகளில் முறையான கல்வி சூழல் பாதிக்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்ட தமிழக உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி கடந்த ஆண்டு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் ஒரே நேரத்தில் செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று கூறியிருந்தார்.
கால அட்டவணை:
இளங்கலை மற்றும் இளம் அறிவியல் பாட தேர்வுகள் ஒவ்வொரு கல்லூரிகளிலும் பொருத்தமற்ற இடைவெளிகளில் நடைபெறுகிறது. தேர்வு முடிவுகளும் தாமதமாக வெளியிடப்படுகிறது. இதனால் பணியில் சேர்வதற்கும், மேற்படிப்பிற்கும் குறித்த காலத்தில் மாணவர்கள் செல்லாத சூழ்நிலை உருவாகிறது. இதனை போக்கும் வகையில் இந்த நடப்பு ஆண்டு(2024-25) முதல் அனைத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு ஒரே மாதிரியான வரைவு கால அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது.
மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் – தமிழ்நாடு அரசு உத்தரவு !
முதலாம் ஆண்டு தொடக்கம் | ஜூலை 3 |
அகமதிப்பீட்டு தேர்வுகள் Internal Exams | செப்டம்பர் மாதம் |
செய்முறை தேர்வுகள் – Practical Exams | அக்டோபர் 9 முதல் 17 வரை |
மாதிரி தேர்வுகள்- Model Exams | அக்டோபர் 18 முதல் 28 வரை |
செமஸ்டர் தேர்வுகள் (1,3,5) | அக்டோபர் 31 முதல் நவம்பர் |
தேர்வு முடிவுகள் – Exam Result | டிசம்பர் 16 க்குள் வெளியீடு |
செமஸ்டர் வகுப்புகள்(2,4,6) | டிசம்பர் 4 முதல் ஏப்ரல் |
செமஸ்டர் தேர்வுகள்(2, 4,6 ) | ஏப்ரல் 15 முதல் மே 10 வரை |
தேர்வு முடிவுகள் (Exam ரிசல்ட்) | மே 31 க்குள் வெளியீடு |
அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் இந்த கால அட்டவணையை பின்பற்ற வேண்டும் என்று உயர்கல்வி துறை அறிவுறுத்தியுள்ளது.