Home » சினிமா » பிரபல பாடகர் P. ஜெயச்சந்திரன் காலமானார்.., சோகத்தில் மூழ்கிய தமிழ் ரசிகர்கள்!!

பிரபல பாடகர் P. ஜெயச்சந்திரன் காலமானார்.., சோகத்தில் மூழ்கிய தமிழ் ரசிகர்கள்!!

பிரபல பாடகர் P. ஜெயச்சந்திரன் காலமானார்.., சோகத்தில் மூழ்கிய தமிழ் ரசிகர்கள்!!

திரைத்துறையில் பிரபல பாடகர் P. ஜெயச்சந்திரன் காலமானார் என்ற செய்தி சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில மாதங்களாக சினிமா துறையில் உயிரிழப்பு தொடர்பான செய்திகள் வந்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில் தற்போது பிரபல பாடகர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் மட்டுமின்றி தென்னிந்திய மொழிகளில் சுமார் 15000 க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் பி.ஜெயச்சந்திரன்(80). தமிழில் பல முன்னணி ஹீரோக்களுக்கு பாட்டு பாடியுள்ளார்.

அதன்படி, விஜயகாந்த் நடித்த வானத்தைப்போல படத்தில் ‘காதல் வெண்ணிலா கையில் சேருமா’,  தளபதி விஜய் நடித்த பூவே உனக்காக படத்தில் ‘சொல்லாமலே யார் பார்த்தது’, அஜித் நடித்த கிரீடம் படத்தில் ‘கனவெல்லாம் பலிக்குதே’ போன்ற 90ஸ் பாடல்களையும் அவர் பாடியுள்ளார். அவரின் இனிமையான குரலுக்கு என்று இப்பொழுது கூட ரசிகர்கள் அவரை தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார்கள்.

சோக பாட்டு முதல் குதூகலமான  பாட்டு வரை அவர் பாடியுள்ளார். இப்படி பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த இவருக்கு கடந்த சில நாட்களாக வயது மூப்பின் காரணங்க  உடல் நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் கேரளாவில் திருச்சூரில் இருக்கும் மருத்துவமனையில் அட்மிட் ஆகி சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி அவர் மரணம் அடைந்தார். அவரின் மரணம் ரசிகர்களுக்கு மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. சோசியல் மீடியாவில் அவர் பாடிய பாடல்களை பதிவு செய்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும் திரை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்

பிக்பாஸ் வீட்டுக்குள் தேம்பித் தேம்பி அழுத சௌந்தர்யா.., வெளியான ஷாக்கிங் வீடியோ!!

அஜித்தின் விடாமுயற்சி லேட்டஸ்ட் அப்டேட்.., சுட சுட வெளியான குட் நியூஸ்.., ரசிகர்கள் கொண்டாட்டம்!!

நடிகை நிதி அகர்வால்விற்கு கொலை மிரட்டல்.., மர்ம நபர் செய்த தகாத செயல்!!!

விஜய் டிவியில் என்ட்ரி கொடுக்கும் ரம்பா?… எந்த நிகழ்ச்சியில் தெரியுமா?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top