
சார் பட இயக்குனர் போஸ் வெங்கட் வீட்டில் துக்கம்: “மெட்டி ஒலி” சீரியலின் மூலம் ரசிகர்களை தன் வசம் இழுத்தவர் தான் போஸ் வெங்கட். சீரியலில் இருந்து வெள்ளித்திரைக்கு போன இவர், பல முன்னணி நடிகர்கள் படத்தில் முக்கியமான ரோலில் நடித்து வருகிறார்.
தொடர்ந்து சினிமாவில் பிசியாக நடித்து வரும் இவர் “கன்னிமாடம்” என்ற படத்தையும் இயக்கியிருக்கிறார். அந்த படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை. இப்படி இருக்கையில் தற்போது நடிகர் விமலை வைத்து சார் படத்தை இயக்கியுள்ளார்.
சார் பட இயக்குனர் போஸ் வெங்கட் வீட்டில் துக்கம்

இப்படம் நேற்று முன்தினம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் தற்போது போஸ் வெங்கட் வீட்டில் ஒரு துக்கமான சம்பவம் அரங்கேறியுள்ளது.
சன்டிவியின் புதிய சீரியலில் களமிறங்கும் அயலி நடிகை – ஹீரோ யார் தெரியுமா?
அதாவது நடிகர் போஸ் வெங்கட் தாய் ராஜாமணி(83) வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று மாலை 5 மணியளவில் காலமானார். மேலும் அவரின் இறுதி சடங்கு இன்று மாலை நடக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இயக்குநரின் குடும்பத்தினருக்கு திரைப் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க
கவினின் `ப்ளடி பெக்கர்’ பட டிரைலர் நாளை வெளியீடு
பிக்பாஸ் 8ல் வெளியேறும் 2வது போட்டியாளர் யார்?
“லப்பர் பந்து” அக்டோபர் 18ம் தேதி ஓடிடியில் ரிலீஸ் – OTTயில் சிக்ஸர் அடிக்குமா?