Home » சினிமா » கவரிங் நகை மாறியதை கண்டுபிடிக்க முத்து போட்ட புதிய பிளான் – பரபரப்பான கட்டத்தில் சிறகடிக்க ஆசை!!

கவரிங் நகை மாறியதை கண்டுபிடிக்க முத்து போட்ட புதிய பிளான் – பரபரப்பான கட்டத்தில் சிறகடிக்க ஆசை!!

கவரிங் நகை மாறியதை கண்டுபிடிக்க முத்து போட்ட புதிய பிளான் - பரபரப்பான கட்டத்தில் சிறகடிக்க ஆசை!!

Siragadikka Aasai: கவரிங் நகை மாறியதை கண்டுபிடிக்க முத்து போட்ட புதிய பிளான்: தற்போது விஜய் டிவியில் பரபரப்பின் உச்சத்தில் ஒளிபரப்பி வரும் சீரியல் தான் சிறகடிக்க ஆசை தொடர். இந்த வாரம் முழுவதும் மீனாவின் நகை எப்படி கவரிங்காக மாறியது என்பது குறித்து தான் புதிரான புதிராக இருக்கிறது.

இதற்கிடையில் மனோஜ் 4 லட்சத்தை ஏமாந்ததால் தனது மூத்த மகனை காப்பாற்ற விஜயா, அவரோ மீனாவின் நகையை தூக்கி கொடுத்துவிட்டார். ஆனால் மனோஜ் நகையை அடமானம் வைக்காமல் அதை விற்று விட்டார். அதன் பிறகு முத்து தங்க நகை எப்படி கவரிங் ஆனது என்பதை கண்டு பிடிக்காமல் விடமாட்டேன் என மும்முரமாக இருந்து வருகிறார்.

நேற்று மனோஜ் 3 லட்சம் பணம் ஏமாந்த விஷயத்தை  குறும்படம் போட்டு குடும்பத்திற்கு வெட்ட வெளிச்சமாக காட்டியுள்ளார். இந்த நிலையில் சிறகடிக்க ஆசை சீரியலின் அடுத்த வார புரோமோ தற்போது வெளியாகியுள்ளது.

Also Read: Siragadikka Aasai: முத்துவிடம் வசமாக சிக்கிய மனோஜ் – கூனி குறுகி நின்ற ரோகிணி – பரபரப்பான கட்டத்தில் “சிறகடிக்க ஆசை” சீரியல்!

அந்த ப்ரோமோவில், நகையை கண்டுபிடிக்க முத்து கையில் ஒரு சூனியம் செய்த எலுமிச்சை பழத்துடன் வீட்டுக்கு சென்று இது சக்தி வாய்ந்த சாமியார் கொடுத்தது. இதை பூஜை அறையில் வைத்து கும்பிட்டால் நகையை மாற்றியவர், எடுத்தவர் யாராக இருந்தாலும் வாய் இழுத்திடுமாம். இதனால் வீட்டில் உள்ளவர்கள் அதிர்ச்சி அடையும் விதமாக ப்ரோமோ அமைந்துள்ளது. 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top