Home » சினிமா » கழுத்தில் தாலியுடன் “சிறகடிக்க ஆசை” சீரியல் நடிகை.., காதுகாதுமாய் முடிந்த கல்யாணம்?..,ஷாக்கிங் போட்டோ வைரல்!!

கழுத்தில் தாலியுடன் “சிறகடிக்க ஆசை” சீரியல் நடிகை.., காதுகாதுமாய் முடிந்த கல்யாணம்?..,ஷாக்கிங் போட்டோ வைரல்!!

கழுத்தில் தாலியுடன் "சிறகடிக்க ஆசை" சீரியல் நடிகை.., காதுகாதுமாய் முடிந்த கல்யாணம்?..,ஷாக்கிங் போட்டோ வைரல்!!

“சிறகடிக்க ஆசை” சீரியல் நடிகை

விஜய் டிவியில் தற்போது மக்களை அதிகம் கவர்ந்து வரும் சீரியல் என்றால் அது “சிறகடிக்க ஆசை” தொடர் தான். பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் டிஆர்பியில் பட்டையை கிளப்பி வருகிறது. இந்த தொடரில் லீடு ரோலில் வெற்றி வசந்த் ,மற்றும் கோமதி பிரியா நடித்து வருகிறார்கள். வெற்றி வசந்த யூடியூப் பிரபலம் என்று நம் எல்லாருக்கும் தெரியும். ஆனால் கோமதி பிரியா சீரியலில் நடித்ததன் மூலமாக தான் மக்களுக்கு தெரியும். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் சீரியல்களில் நடித்துள்ளார். இது ஒரு பக்கம் இன்னொரு பக்கம் தொடர்ந்து சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

அதன்படி அவர் எடுக்கும் புகைப்படம் மற்றும் வீடியோவை பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் தற்போது அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தாலியுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அதற்கு கேப்ஷனாக, ” செம்பனீர் பூவு சீரியலில் வரும் காட்சியில் தனக்கு திருமணம் முடிந்துவிட்டது” என்று குறிப்பிட்டுள்ளார். அத பார்த்த ரசிகர்கள் சீரியலில் தான் கல்யாணமா? நிஜத்தில் இல்லையா? என்று பதறி போய் கேட்டு வருகின்றனர்.  “செம்பனீர் பூவு”. சீரியல் தமிழில் ஒளிபரப்பாகி வரும் “சிறகடிக்க ஆசை” சீரியலின் மலையாள ரீமேக் தான். இதிலும் கோமதி பிரியா தான் ஹீரோயினாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

என்னது.., அஜித்துடன் சிவகார்த்திகேயன் நடிச்சுருக்காரா?.., எந்த படத்தில் தெரியுமா?.., புகைப்படம் உள்ளே!!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top