
கிரிஷிற்கு சாப்பாடு ஊட்டிய ரோஹினி… முத்து கேட்ட அந்த கேள்வி: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் மக்களுக்கு மிகவும் பிடித்த ஃபேவரைட் தொடர் என்றால் அது சிறகடிக்க ஆசை தான். கடந்த சில வாரங்களாகவே டிஆர்பியில் உச்சத்தில் இருந்து வருகிறது. தற்போது விஜய் டிவியின் தூணாக இருந்து வரும் இந்த தொடரின் அடுத்தடுத்து எபிசோடுகள் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் இன்று பெரிய டிவிஸ்ட் வைக்கும் விதமாக ஒரு ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதாவது இப்போது கதையில் க்ரிஷ்ஷை முத்து-மீனா வீட்டிற்கு அழைத்து வர ரோஹினி கடும் சிக்கலில் சிக்கியுள்ளார்.

இதில் இருந்து தப்பிக்க மீனாவை தனது தோழியை வைத்து வீட்டை விட்டு வெளியே அனுப்புகிறார். இதையடுத்து இங்கு ஏன் வந்தீர்கள் என்று தனது அம்மாவிடம் கேட்க, கடைசியில் ரோஹினி க்ரிஷிடம் நான் தான் உன் அம்மா என்று கூறிவிடுகிறார். இதற்கிடையில் வெளியே சென்ற மீனாவுக்கு தோழி வீட்டில் மலேசியா மாமா குரல் கேட்பதாக சந்தேகப்படுகிறார். அப்போது ரோஹினி பாசமாக க்ரிஷிற்கு உணவு ஊட்டி விடுகிறார், அதை முத்து பார்த்துவிடுகிறார். இங்கே என்ன நடக்கிறது என்று முத்து கேட்க, ரோஹினி ஷாக் ஆகும் விதமாக ப்ரோமோ அமைந்துள்ளது. எனவே மீனாவிடம் ரோஹினி மலேசியா மாமா சிக்குவாரா அல்லது தப்பித்து விடுவாரா? பொறுத்து இருந்து பார்க்கலாம். vijay tv – serials list – chinnathirai show – siragadikka aasai serial
கன்னியாகுமரி வாக்கு எண்ணும் மையத்திற்கு கத்தியுடன் நுழைந்த நபர் – வளைத்து பிடித்த காவல்துறை!!
சமீபத்திய செய்திகள் – இதையும் மறக்கமாக படிங்க
மக்களவை தேர்தல் முடிவுகள் 2024 – LIVE UPDATE
நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஆண் குழந்தை பிறந்தது