சிவகங்கை வங்கியில் கொள்ளை முயற்சி. தேவகோட்டை அருகே உள்ள கூட்டுறவு வங்கியில் காவலாளியை இரும்பு கம்பியால் அடித்து வீசி வங்கியில் புகுந்த கொள்ளையர்கள். லாக்கர் அறை கதவை உடைக்க முடியாததால் ரூ.3 கோடி மதிப்புள்ள நகைகள் தப்பின.
சிவகங்கை வங்கியில் கொள்ளை முயற்சி
வங்கியில் நடந்த கொள்ளை:
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டைக்கு அருகே உள்ளது தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி. இங்கு பொன்னத்தி கிராமத்தை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் பூமிநாதன் என்பவர் இரவு காவலாளியாக பணியாற்றி வருகிறார். நேற்று இரவு வங்கிக்கு வந்த பூமிநாதன் அறை கதவை திறந்து உள்ளே சென்றார். அப்போது ஒரு கும்பல் மறைந்திருந்து பூமிநாதனை இரும்பு கம்பியால் தாக்கி வீசினர். பின்னர் வங்கியின் உள்ளே சென்று கண்காணிப்பு கேமராக்களை சேதப்படுத்தினர்.
வங்கியின் உள்ளே சென்ற கும்பல் லாக்கர் அறை கதவை உடைத்து திறக்க முயற்சித்தனர். ஆனால் அவர்களால் அதை திறக்க முடியவில்லை. அறையின் சுவரையும் உடைக்க முயன்றுள்ளனர். எதுவும் முடியாததால் அவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.
அதிமுக முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி வழக்கு – 3 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவு !
போலீசார் ரோந்து:
தினமும் நள்ளிரவு 2 மணியளவில் போலீசார் ரோந்து வந்து வங்கியில் உள்ள புத்தகத்தில் கையெழுத்து போடுவது வழக்கம். அப்படி வந்து பார்க்கும் போது வங்கியில் அரங்கேறிய கொள்ளை முயற்சி தெரிய வந்துள்ளது. பின்னர் வங்கி செயலாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. புதரில் கிடந்த காவலாளியை போலீசார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
தப்பிய நகைகள்:
கண்காணிப்பு கேமரா செயலிழந்து விட்டதால் கொள்ளையர்கள் யார் என்பது தெரியவில்லை. இந்த சம்பவம் குறித்து போலீசார் கொள்ளையர்களை பிடிக்க தீவிர விசாரணையில் உள்ளனர். தங்க நகைகள் வைக்கப்பட்டுள்ள லாக்கர் அறை கதவை கொள்ளையர்கள் உடைக்க முடியாததால் ரூ.3 கோடி மதிப்புள்ள நகைகள் தப்பியது என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.