சிவகார்த்திகேயனின் அமரன் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு - கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!சிவகார்த்திகேயனின் அமரன் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு - கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!

Kollywood cinema news: சிவகார்த்திகேயனின் அமரன் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு: கோலிவுட்டில் நுழைந்த கொஞ்ச காலத்திலேயே சென்சேஷன் நடிகராக இருந்து வருபவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன். தற்போது இவர் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் அமரன். கமல் தயாரித்த இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார்.

மேலும் ஜி.வி.பிரகாஷ் குமார்  இசையமைத்துள்ள இப்படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் நிறைவடைந்த நிலையில், தற்போது அடுத்த கட்ட பணிகளில் படக்குழு இருந்து வருகிறது.

அதுமட்டுமின்றி அண்மையில் வெளியான போஸ்டர்கள் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படம் குறித்து முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த “அமரன்” திரைப்படம் வருகிற தீபாவளி பண்டிகையை ஒட்டி அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி வெளியாகும் என்ற போஸ்டரை ராஜ்கமல் நிறுவனம் வெளியிட்டுள்ளது. தற்போது அந்த போஸ்டர் சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது. மேலும் விரைவில் படத்தோட டிரைலர் வீடியோவை படக்குழு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read: பிரபல நடிகையை திடீரென சந்தித்த தளபதி விஜய் – ஒரு வேலை இருக்குமோ? – போட்டோ வைரல்!!

அதுமட்டுமின்றி இப்படத்தில் சிவா ஆர்மி மேனாக “முகுந்தன்” என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளதால், படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இதனை தொடர்ந்து சிவா ஏ. ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் SK23 படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. cinema news – Sivakarthikeyan – Sai Pallavi – G. V. Prakash Kumar – Raaj Kamal Films International – Red Giant Movies

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *