சிவகார்த்திகேயனின் "அமரன்" பட டிரைலர் ரிலீஸ் எப்போது? படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!சிவகார்த்திகேயனின் "அமரன்" பட டிரைலர் ரிலீஸ் எப்போது? படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

சிவகார்த்திகேயனின் “அமரன்” பட டிரைலர்: விஜய் டிவியில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து தற்போது அடுத்த தளபதியாக உயர்ந்து நிற்பவர் தான் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் கடைசியாக அயலான் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள “அமரன்” திரைப்படத்தில் நடித்துள்ளார்.

சிவகார்த்திகேயனின் “அமரன்” பட டிரைலர்

இப்படத்தை உலகநாயகன் கமல்ஹாசன் ராஜ்கமல் ப்ரொடக்சன் மூலம் தயாரித்துள்ளார். இவருடன் சேர்ந்து சாய் பல்லவி, ஷியாம் மோகன், புவன் அரோரா, ராகுல் போஸ் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்துள்ளனர்.

மேலும் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து நாட்டிற்காக தனது உயிரை தியாகம் செய்த வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்திற்கு மியூசிக் டைரக்டர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் பல முன்னணி பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் அமரன் படம் குறித்து படக்குழு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

BB 8: வைல்கார்டில் களமிறங்கும் அர்னாவின் மாஜி மனைவி? பிக்பாஸ் வீட்டில் வெடிக்க போகும் பூகம்பம்!!

அதாவது சிவகார்த்திகேயன் நடிக்கும்  ‘அமரன்’ படத்தின் டிரெய்லர் நாளை மாலை 6 மணிக்கு வெளியாக இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்படம் வருகிற அக்டோபர் 31ம் தேதி ரிலீஸ் ஆக இருப்பது குறிப்பிடத்தக்கது. 

சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க

பிக்பாஸ் ஷோவை விட்டு அர்னவ் வெளியேறினார் 

தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கு – நவம்பர் 2ம் தேதி ஒத்திவைப்பு

சார் பட இயக்குனர் போஸ் வெங்கட் வீட்டில் துக்கம்

சன்டிவியின் புதிய சீரியலில் களமிறங்கும் அயலி நடிகை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *