எமோஷனல் பயோபிக் படமாக உருவாகும் "எஸ்கே 21".., அந்த ராணுவ வீரரின் வாழ்க்கை வரலாறா?.., பெரிய எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!எமோஷனல் பயோபிக் படமாக உருவாகும் "எஸ்கே 21".., அந்த ராணுவ வீரரின் வாழ்க்கை வரலாறா?.., பெரிய எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான அயலான் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. தற்போது இவர் கமல் தயாரிப்பில்  ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் “எஸ்கே 21” படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். மேலும் இப்படத்தில் இவருக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்க, ஜிவி பிரகாஷ் இசை அமைத்து வருகிறார். பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த படத்தின் ஷூட்டிங் இன்னும் ஒரு மாதங்களில் முடிவடைய இருப்பதாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து இப்படத்தை குறித்து புதிய அப்டேட் இன்று மாலை வெளியாகும் என படக்குழு தெரிவித்திருந்த நிலையில், தற்போது சூப்பர் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, சிவகார்த்திகேயன் இப்படத்தில் ராணுவ வீரராக நடிக்கிறார் என்று முன்னரே கூறப்பட்டது. அதன்படி  இந்திய ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து தான் படம் எடுக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் 14-ம் தேதி ஜம்மு காஷ்மீரில் உள்ள சோபியான் மாவட்டத்தில் துணிச்சலாக செயல்பட்டு 3 தீவிரவாதிகளை கொன்று வீர மரணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. கண்டிப்பாக இதுவரை பார்க்காத சிவகார்த்திகேயனை இந்த படத்தில் பார்க்கலாம் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. 

24 வயதில் மரணமடைந்த உலக சாதனை படைத்த முக்கிய வீரர்.., சோகத்தில் தத்தளிக்கும் பொது மக்கள்.., என்ன நடந்தது? 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *