சிவகார்த்திகேயனின் 3வது மகனின் பெயர் என்ன தெரியுமா? அட.. பேரு நல்லா இருக்கே!சிவகார்த்திகேயனின் 3வது மகனின் பெயர் என்ன தெரியுமா? அட.. பேரு நல்லா இருக்கே!

Kollywood News: சிவகார்த்திகேயனின் 3வது மகனின் பெயர் என்ன தெரியுமா: சிவகார்த்திகேயன் தற்போது தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருந்து வருகிறார். குறிப்பாக தளபதி விஜய் அரசியலுக்கு சென்ற நிலையில், அவர் இடத்தை சிவா தான் நிரப்ப இருக்கிறார் என்று கோலிவுட்டில் பலரும் கூறி வருகின்றனர்.

அதற்கு ஏற்றார் போல் சிவா தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். தற்போது இவர் நடிப்பில் அமரன் திரைப்படம் உருவாகியுள்ள, நிலையில் இப்படம் தீபாவளி அன்று திரைக்கு வர இருக்கிறது. மேலும் அவரின் சினிமா கெரியரில் முக்கிய அங்கமாகவும் உறுதுணையாகவும் அவரது மனைவி இருந்து வருகிறார்.

இவர்களுக்கு ஆராதனா என்ற் மகளும், குகன் தாஸ் என்ற மகனும் இருந்து வரும் நிலையில் சமீபத்தில் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அந்த சந்தோஷத்தை சிவகார்த்திகேயன் ரசிகர்களுடன் பகிர்ந்த நிலையில், குழந்தைக்கு என்ன பெயர் வைக்க போகிறீர்கள் என்று கேள்வி எழுப்பி வந்தனர்.

Also Read: வெண்ணிற ஆடை மூர்த்தியின் மனைவி இந்த பிரபல நடிகையா? அடடா இது தெரியாம போச்சே!!

இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது மகனுக்கு  பவன் என்று பெயர் சூட்டியுள்ளார். மேலும் இன்று சிவகார்த்திகேயனின் இல்லத்தில் நடந்த பெயர் சூட்டு விழாவில் நெருங்கிய உறவினர்கள் மத்தியில் சிம்பிளாக நடந்து முடிந்தது. அது தொடர்பான வீடியோவை சிவகார்த்திகேயன் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *