
சிவகாசி செங்கமலப்பட்டி பட்டாசு ஆலையில் திடீர் தீ விபத்து : விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள செங்கமலப்பட்டி என்ற பகுதியில் சரவணன் என்பவருக்கு சொந்தமான சுதர்சன் என்ற பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வருகிறது. இந்த பட்டாசு ஆலையில் கிட்டத்தட்ட 50 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் வழக்கம் போல் ஊழியர்கள் தங்களது பணிகளில் மும்மரமாக இருந்து வந்தனர். இந்நிலையில் எதிர்பாராத விதமாக பட்டாசு ஆலையில் பட்டாசுக்கு மருந்து நிரப்பும் பணியின் போது உராய்வு ஏற்பட்டு விபத்து ஏற்பட்டுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இதில் 6க்கும் மேற்பட்ட அறைகள் இடிந்து சுக்கு நூறாக போகின. அதுமட்டுமின்றி இந்த விபத்தில் தற்போது வரை 5 பெண்கள் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பல பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி உள்ளே சிக்கிக் கொண்டிருக்கும் ஆட்களை மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.சிவகாசி செங்கமலப்பட்டி பட்டாசு ஆலையில் திடீர் தீ விபத்து