Home » ஆன்மீகம் » ஆன்மிகம் | முருகன் கோவில் | மதுரை I பழமுதிர்சோலை முழுசா பாக்கலாம் வாங்க!!

ஆன்மிகம் | முருகன் கோவில் | மதுரை I பழமுதிர்சோலை முழுசா பாக்கலாம் வாங்க!!

Aanmegam Madurai Murugan Temple Palamuthircholai

தமிழ் கடவுள் என்று அழைக்கப்படும் முருகனின் பழமுதிர்ச்சோலை வரலாறு குறித்து இந்த தொகுப்பில் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

ஆன்மிகம் | முருகன் கோவில் | மதுரை I பழமுதிர்சோலை முழுசா பாக்கலாம் வாங்க!!

பழமுதிர்சோலை இந்தியாவில் உள்ள தமிழ்நாடு மாநிலத்தில் தூங்காநகரமாக இருக்கும் மதுரை மாவட்டத்திலிருந்து பதினைந்து மைல் தொலைவில் அமைந்துள்ள ஒரு முருகன் கோயிலாகும். முருகனின் ஆறுபடை வீடுகளுள் ஒன்று எனக் கருதப்படுகிறது.

முருகன் சிறுவனாய் வந்து ஓளவையாரை சோதித்தது இங்குதான் நம்பப்படும் இடம். விஷ்ணு கோயிலான அழகர் கோவில் இதற்கு அருகாமையில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அருணாகிரிநாதர் இத்தலம் மீது திருப்புகழ் பாடியுள்ளார்.

“சோலைமலை” என்ற பெயரும் இதற்கு உண்டு. இங்குள்ள முருகன் வெற்றிவேல் முருகன் என்று அழைக்கப்படுகிறார். பழமுதிர்சோலை என்பதற்கு “பழங்கள் உதிர்க்கப் பெற்ற சோலை” என்று பொருள் எடுத்துக் கொள்ளலாம்.

அறுபடை வீடுகள் ஒவ்வொன்றிலும் திருவிளையாடல் புரிந்த அழகன் முருகன், இந்தத் தலத்தில் மதுரை நோக்கி சென்று கொண்டிருந்த ஓளவையாரிடம் திருவிளையாடல் புரிந்ததாகச் சொல்கிறார்கள். தனது புலமையால் புகழின் உச்சிக்குச் சென்ற அவ்வையாருக்கு தான் என்ற அகங்காரம் விடுவிக்க எண்ணிய முருகன், அவ்வை மதுரைக்கு காட்டு வழியாக நடந்து செல்லும் வழியில் ஆடு மேய்க்கும் சிறுவனாக தோன்றி வந்தார்.

அங்கிருந்த ஒரு நாவல் மரத்தின் கிளை ஒன்றில் ஏறி அமர்ந்து கொண்டார். நடந்து வந்த களைப்பால் அந்த மரத்தின் அடியில் வந்து அமர்ந்தார் அவ்வை. நீண்ட தொலைவு பயணம் செய்திருந்தால் அவருக்குக் களைப்பையும் தந்திருந்தது. அப்போது அவருக்கு வயிறு பசிக்கவும் செய்தது. அப்போது தற்செயலாக அந்த மரக்கிளையில் ஆடு மேய்க்கும் சிறுவன் ஒருவன் அமர்ந்திருப்பதை கண்டார்.

மதுரையிலேயே உள்ள பஞ்சபூத தலங்கள், எங்கெங்கு உள்ளது வாங்க பாக்கலாம் !

அந்த மரத்தில் நிறைய நாவல் பழங்கள் இருப்பதையும் பார்த்தார். உடனே அந்தச் சிறுவனிடம் ” குழந்தாய், எனக்கு பசிக்கிறது. சிறிது நாவல் பழங்களை பறித்துத் தர முடியுமா?” என்று கேட்டார். அதற்கு சிறுவனாக இருந்த முருகப்பெருமான், சுட்டப் பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா? என்று கேட்டார்.

பழமுதிர்சோலை நாவல் மரம்

சிறுவனின் கேள்வி அவ்வைக்குப் புரியவில்லை. பழத்தில் கூட சுட்டப் பழம், சுடாத பழம் என்று இருக்கிறதா? என்று எண்ணிக் கொண்டவர், விளையாட்டாக “சுடாத பழத்தையே கொடுப்பா..,” என்று கேட்டு கொண்டார். “சுடாத பழம் வேண்டுமா? சரி உலுக்கி விடுகிறேன் சுடாத பழமா பார்த்து எடுத்துக்கோ” என்று கூறி, நாவல் மரத்தின் கிளை ஒன்றை சிறுவனாகிய முருகப் பெருமான் உலுப்ப நாவல் பழங்கள் அதில் இருந்து கீழே உதிர்ந்து விழுந்தன.

அந்த பழங்களைப் பொறுக்கிய அவ்வை, அந்தப் பழத்தில் மணல் ஒட்டி இருந்தால், அவற்றை நீக்கும் பொருட்டு வாயால் ஊதினார். இதை பார்த்துக் கொண்டிருந்த சிறுவனாகிய முருகப் பெருமான் ” என்ன பாட்டி, பழம் சுடுகிறதா?” என்று கேட்டார்.

சிறுவனின் அந்த ஒரு கேள்வியிலேயே அவ்வையின் அகங்காரம் பறந்து போனது. தன்னையே சிந்திக்க வைத்த அந்த சிறுவன் நிச்சயம் மானிடனாக இருக்க முடியாது என்று கணித்த அவ்வை. ” குழந்தாய்.., நீ யாரப்பா?” என்று கேட்டார்.

Aanmegam Seithigal in Tamil Nadu Temple

மரக்கிளையில் இருந்து கீழே குதித்த சிறுவன் முருகப்பெருமான், தனது சுய உருவத்தை காண்பித்து அவ்வைக்கு அருள் புரிந்தார். இந்தத் திருவிளையாடல், நடந்த நாவல் மரத்தின் கிளை மரம் இன்னும் சோலைமலை உச்சியில் காணப்படுகிறது. சோலைமலை முருகன் கோவிலுக்கு சற்று முன்னதாக இந்த மரத்தை இன்றும் நாம் பார்க்கலாம்.

தமிழகத்தில் உள்ள முக்கிய அம்மன் கோவில்கள் மற்றும் அதன் சிறப்புகள் !

தமிழகத்தில் முக்கிய ஆன்மிக சுற்றுலா தலங்கள் !

உங்கள் ராசிக்கு கும்பகோணத்தில் எந்த கோவிலுக்கு செல்ல வேண்டும் முழு விபரம் உள்ளே !

தங்கம் வீட்டில் தங்கவில்லையா ! ஸ்வர்ண தோஷம் இருக்கலாம் ! 

குழந்தைகளுக்கு வித்யாரம்பம் இங்கு செய்து பாருங்கள் ! தமிழகத்தில் உள்ள முக்கிய சரஸ்வதி கோவில்கள் !

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top