40 வயதில் காதலனை கரம் பிடிக்கும் எஸ்.ஜே. சூர்யா பட நடிகை.., அட இந்த பட ஹீரோயினா?.., மாப்பிள்ளை யார் தெரியுமா?40 வயதில் காதலனை கரம் பிடிக்கும் எஸ்.ஜே. சூர்யா பட நடிகை.., அட இந்த பட ஹீரோயினா?.., மாப்பிள்ளை யார் தெரியுமா?

எஸ்.ஜே. சூர்யா பட நடிகை

தமிழ் சினிமாவில் நடிப்பு அரக்கனாக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகர் எஸ்.ஜே. சூர்யா. தற்போது வில்லனாக கலக்கி வரும் இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான அன்பே ஆருயிரே படத்தின் மூலம் கோலிவுட்டில் என்ட்ரி கொடுத்தவர் தான் மீரா சோப்ரா. இதனை தொடர்ந்து  ஜாம்பவான், லீ, மருதமலை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஒரு கட்டத்தில் அவருக்கு படவாய்ப்புகள் குறைந்த நிலையில், தற்போது வரை திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வருகிறார். இதனை தொடர்ந்து 40 வயதாகும் அவருக்கு விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வெளியாகிய வண்ணம் இருந்தது.

இது குறித்து அவரிடம் கேட்டபோது, ஆமாம் திருமணம் தான் மார்ச் மாதம் எனக்கு கல்யாணம் நடைபெற இருப்பதாக தெரிவித்தார். இந்நிலையில் அவர் தனது நீண்ட நாள் காதலனை கரம்பிடிக்க உள்ளார் என தெரிய வந்துள்ளது. அதுமட்டுமின்றி அவரின் கல்யாணத்தின் ஏற்பாடுகள் தற்போது தடபுடலாக நடைபெற்று வருகிறதாம். ஆனால், இப்பொழுது வரை அவர் மணந்துகொள்ள இருக்கும் காதலன் குறித்து எந்த ஒரு தகவலும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *