உயிரை குடிக்கும் ஸ்மோக் பிஸ்கட்(Smoke Biscuit) – கடந்த சில நாட்களாக ஸ்மோக் பிஸ்கட் விற்பனை சம்பந்தமான செய்திகள் வெளியாகி கொண்டே இருக்கிறது. குறிப்பாக சமீபத்தில் கர்நாடகாவில் ஒரு சிறுவன் ஸ்மோக் பிஸ்கட்டை சாப்பிட்டு வயிற்று வலியால் துடித்த சம்பவம் அனைவரையும் கண்கலங்க வைத்தது. அதில் இருந்து வரும் புகையை Fun ஆக நினைத்து கொண்டு குழந்தைகள் சாப்பிட்டு வருகின்றனர். தற்போது கல்யாணம் உள்ளிட்ட விசேஷ வீடுகளிலும் ஐஸ்கீர்ம்களுக்கு பதிலாக ஸ்மோக் பிஸ்கட்டை தான் ஆர்டர் செய்கின்றனர். இந்நிலையில் ஸ்மோக் பிஸ்கட் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் என்று உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
அதில், ” ஸ்மோக் பிஸ்கட்டை குழந்தைகளுக்கு வாங்கி கொடுக்க வேண்டாம். அதனால் உயிரிழக்கும் அபாயம் ஏற்படும். குறிப்பாக இந்த பிஸ்கட் liquid nitrogen மூலம் தயாரிக்கப்படுவதால் குழந்தைகளுக்கு உடலில் உள்ள செயல்திறனை வெகுவாக பாதித்து உயிருக்கு ஆபத்தாக முடியும் என்று கூறியுள்ளனர். எனவே இதை யாரும் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டாம். இதனை தொடர்ந்து திரவ நைட்ரஜன் பயன்படுத்திய உணவுப் பொருட்களை விற்கக் கூடாது என உணவு பாதுகாப்பு துறை உத்தரவு அளித்துள்ளது. அதுமட்டுமின்றி தமிழகத்தில் திரவ நைட்ரஜன் பயன்படுத்திய உணவுப் பொருட்கள் விற்கப்படுகிறதா? என்று ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவு அளித்துள்ளனர். மேலும் திரவ நைட்ரஜனை தேவை படும் இடத்தில் மட்டும் பயன்படுத்த வேண்டும். இந்த உத்தரவை மீறி பயன்படுத்தினால் உணவு பாதுகாப்பு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.