சோளிங்கரில் மலையேறிய பக்தர் உயிரிழப்பு. ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் மலையின் மீது அமைந்துள்ளது லட்சுமி நரசிம்மர் கோவில். 108 வைணவ திவ்ய தலங்களில் ஒன்றான நரசிம்மர் கோவிலில் அதிகளவிலான பக்தர் கூட்டம் மலையேறி சாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்நிலையில் சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவிலில் மலையேறி பக்தர் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
சோளிங்கரில் மலையேறிய பக்தர் உயிரிழப்பு :
சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவிலில் மலையேறி பக்தர் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழப்பு. மேலும் பராமரிப்பு பணிக்காக ரோப்கார் சேவை நிறுத்தப்பட்ட நிலையில் பெங்களூருவை சேர்ந்த முத்துக்குமார் என்பவர் மலையேறிய போது 1200 வது படி வரை ஏறிய அவர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார்.
பாம்பின் விஷம் நீங்க கங்கையில் மிதக்கவிடப்பட்ட இளைஞர் ! மூடநம்பிக்கையால் பறிபோன உயிர் – இந்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி !
அந்த வகையில் தற்போது சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவிலில் மலையேறிய பக்தர் உயிரிழந்த சம்பவம் சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.