நடிகர் சூரிக்கு சொந்தமான ஹோட்டல்கள் மதுரையில் பல பகுதிகளில் உள்ள நிலையில் சூரியின் அம்மன் உணவகத்திற்கு சீல் வைக்க வேண்டும் என்று ஒருவர் புகார் மனு அளித்துள்ளார்.
ஹோட்டல்:
சினிமாவில் காமெடி நடிகராக நுழைந்து தற்போது ஹீரோவாக கலக்கி வரும் சூரிக்கு சொந்தமான உணவகங்கள் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை, திருநகர், ரிசர்வ்லைன், அவனியாபுரம் உள்ளிட்ட பல பகுதிகளில் இயங்கி வருகிறது. டீ முதல் சாப்பாடு வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மற்ற கடைகளை காட்டிலும், இந்த கடையில் மலிவான விலையில் உணவை கொடுத்து வருவதாக மக்கள் கூறி வருகின்றனர்.
மதுரையில் சூரியின் அம்மன் உணவகத்திற்கு சீல்?.., என்ன காரணம் தெரியுமா?
இந்நிலையில் முத்துக்குமார் என்ற வழக்கறிஞர் ஒருவர் மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் அம்மன் உணவகம் மீது புகார் அளித்துள்ளார். அதாவது, மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை வளாகத்தில் சூரியின் அம்மன் உணவகம் செயல்பட்டு வருகிறது. இந்த கடை அவர்கள் இடத்தையும் தாண்டி அருகில் இருக்கும் செவிலியர் விடுதி இடத்தையும் ஆக்கிரமித்து ஷெட் அமைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் தனுஷுக்கு உடல்நிலை பாதிப்பு?.., என்ன தான் ஆச்சு? .., வெளியான ஷாக்கிங் தகவல்!!
அதுமட்டுமின்றி, அந்த செவிலியர் விடுதி கழிவுநீர் தொட்டி மேல் ஊழியர்கள் அமர்ந்து காய்கறி வெட்டுவது, சமைப்பது போன்ற சுகாதாரமற்ற செயல்பாடுகளில் ஈடுபடுவதாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ளார். மேலும் அங்கு தயாரிக்கும் உணவை தான் நோயாளிகள் வாங்கி சாப்பிடுகிறார்கள். எனவே இதனால் நோயாளிகளுக்கு மேலும் நோய் ஏற்பட காரணமாக அமையலாம். எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுத்து உணவகத்திற்கு சீல் வைக்க வேண்டும் என அவர் புகாரில் தெரிவித்துள்ளார்.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
மறைந்த VJ சித்ராவின் தந்தை தூக்கிட்டு தற்கொலை.., ரசிகர்கள் ஷாக்!!
காஞ்சனா 4ல் விஜய் பட ஹீரோயின்.., ராகவா லாரன்ஸ் போட்ட மாஸ்டர் பிளான்!!
சுந்தரி சீரியல் நடிகர் திலீப் ஷங்கர் ஹோட்டல் அறையில் சடலமாக மீட்பு.., என்ன காரணம் தெரியுமா?
வாரிசு நடிகர்களால் சினிமா வாய்ப்பை இழந்தேன்.., பிரபல நடிகர் ஷாம் உருக்கம்.., யாரை சொல்கிறார்?
2024ல் அதிக வசூலை ஈட்டிய டாப் 10 இந்திய படங்கள்…, விஜய்யின் தி கோட் எத்தனாவது இடம் தெரியுமா?