எப்பா.., விசுவாசத்துல நாயையே தூக்கி சாப்ட்ருவாரு போலயே? சூரியின் "கருடன்" கிளிம்ப்ஸ் வீடியோ வெளியீடு!!எப்பா.., விசுவாசத்துல நாயையே தூக்கி சாப்ட்ருவாரு போலயே? சூரியின் "கருடன்" கிளிம்ப்ஸ் வீடியோ வெளியீடு!!

தென்னிந்திய தமிழ் சினிமாவில் காமெடியனாக உள்ளே நுழைந்து தற்போது  ஹீரோவாக அசத்தி வருபவர் தான் நடிகர் சூரி. இவர் நடிப்பில் வெளியான விடுதலை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்து கொண்டிருக்கின்றனர். தற்போது மீண்டும் சூரி ஹீரோவாக நடித்து வரும் திரைப்படம் தான் கருடன். இப்படத்தின் கதையை வெற்றிமாறன் எழுத, R S. துரை செந்தில்குமார் இயக்கியுள்ளார். மேலும் இப்படத்தில் சூரியுடன் இணைந்து சசிகுமார், சமுத்திரக்கனி, மொட்டை ராஜேந்திரன், ஷிவதா நாயர், மைம் கோபி, ரேவதி சர்மா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளதால் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இந்நிலையில் கருடன் படத்தை குறித்து படக்குழு ஒரு அப்டேட்டை வெளியிட்டுள்ளது. அதாவது நடிகர் சூரி கதாநாயகனாக நடித்த கருடன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அதை பார்த்த ரசிகர்கள் சூரி கேரக்டர் ரொம்ப அழுத்தமாக இருக்கும் போலயே என்று கூறி வருகின்றனர்.    

தமிழக மக்களே உஷார்., இந்த 5 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் பிச்சு உதற போகும் கனமழை – வானிலை மையம் தகவல்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *