ராமேஸ்வரம் பாம்பனில் மீண்டும் ரயில் போக்குவரத்து - அக்டோபர் 1ம் தேதி தொடங்கும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு !ராமேஸ்வரம் பாம்பனில் மீண்டும் ரயில் போக்குவரத்து - அக்டோபர் 1ம் தேதி தொடங்கும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு !

தீவுப்பகுதியான ராமேஸ்வரம் பாம்பனில் மீண்டும் ரயில் போக்குவரத்து அக்டோபர் 1ம் தேதி முதல் தொடங்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்திய நாட்டின் நிலப்பரப்பினை ராமேஸ்வரம் தீவுடன் இணைக்கும் வகையில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டது தான் இந்த பாம்பன் ரயில் பாலமாகும். மேலும் மண்டபத்திற்கும் ராமேஸ்வரத்திற்கும் இடையே அமைந்துள்ள பாம்பன் கடலில் சுமார் 2 கி.மி. நீளத்திற்கு 1914-ம் ஆண்டு அமைக்கப்பட்டது.

அத்துடன் இந்த ரயில் பாலத்தின் இடையே தெற்க்கில் இருந்து வடக்காக கப்பல்கள் கடந்து செல்ல ஏதுவாக நவீன தூக்குப்பாலமும் அமைக்கப்பட்டிருந்தது.

அந்தவகையில் `ஹெர்சர் பாலம்’ என அமைக்கப்பட்ட இந்த தூக்கு பாலமானது கப்பல்கள் செல்லும் போது இரண்டாக திறந்து வழிவிடும் அமைப்பில் உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.Rameswaram pamban bridge train service

அந்தவகையில் இதுவரை எந்த ஒரு விபத்தும் காணாத பாம்பன் கடல் பாலமானது கடந்த 110 ஆண்டுகளாக தற்போது வரை பயன்பாட்டில் இருந்து வருகிறது.

அத்துடன் அதிக உப்பு தன்மை கொண்ட பாம்பன் கடலின் மீது அமைக்கப்பட்ட இந்த பாலத்தில் அரிமானம் ஏற்படாமல் இருப்பதற்காக குறிப்பிட்ட கால இடைவெளியில் இரசாயன வர்ண பூச்சு செய்யப்பட்டு வந்தது.

இருந்தாலும் கடல் உப்பு காற்றின் காரணமாக கப்பல்களுக்கு வழி விடுவதற்காக திறக்கப்படும் பாலத்தின் கிர்டர் பகுதிகள் துருப்பிடிக்க ஆரம்பித்தது.

இதன் காரணமாக பாலத்தின் அபாய நிலை கருதி ரயில்கள் 2 கிலோ மீட்டர் நீளம் கொண்ட பாலப்பகுதியில் 10 கிலோமீட்டர் வேகத்தில் மட்டுமே இயக்கப்பட்டன.

அத்துடன் அடிக்கடி பராமரிப்பிற்காக ரயில் போக்குவரத்தை நிறுத்த வேண்டிய சூழ்நிலை இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.Southern Railway announcement

கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் – ஒண்டிப்புதூரில் 20.72 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு !

இதனை தொடர்ந்து தொழில்நுட்ப வல்லுநர்கள் பாம்பன் பாலத்தை தொடர்ந்து பயன்படுத்துவது ஆபத்தை விளைவிக்கும் என கருத்து தெரிவித்திருந்த நிலையில்,

நவீன வசதிகளுடன் ரூபாய் 550 கோடி செலவில் புதிய பாலம் கட்ட ரயில்வே வாரியம் முடிவு செய்தது.

அந்த வகையில் மண்டபம் ராமேஸ்வரம் இடையிலான ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு புதிய பாலம் 2.8 கி.மீ. நீளத்திற்கு நடுவில் பெரிய கப்பல்கள் சென்று வரும் வகையில் கட்டப்பட்டு வந்தது.

இந்நிலையில் ராமேஸ்வரம் மண்டபம் இடையேயான இரயில் சேவை கடந்த இரண்டு ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் பாம்பன் புதிய ரயில் பாலம் பணிகள் முடிவடையவுள்ளதால்

வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் ராமேஸ்வரம் மண்டபம் இடையேயான ரயில் சேவை தொடங்க வாய்ப்புள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *