தற்போது தனிநபர்கள் மற்றும் வேலைவாய்ப்பு ஏஜென்சிகளை நம்ப வேண்டாம் என பொதுமக்களுக்கு தெற்கு ரயில்வே எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
தனிநபர்கள் மற்றும் வேலைவாய்ப்பு ஏஜென்சிகளை நம்ப வேண்டாம்
அரசு வேலைவாய்ப்பு :
தற்போதுள்ள காலகட்டத்தில் பெரும்பாலானவர்களின் வேலைவாய்ப்பு தேர்வாக அரசு வேலைவாய்ப்பு உள்ளது. மாநில அரசு பணிகள் மற்றும் மத்திய அரசு பணிகளில் சேர பட்டப்படிப்பு முடித்தவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். குறிப்பாக மத்திய அரசு பணிகளில் சேர போட்டி தேர்வுகளில் பங்கேற்பவர்களின் எண்ணிக்கை சற்று அதிகம் என்றே கூறலாம்.
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
ரயில்வே வேலை மோசடி :
இதனை தொடர்ந்து தெற்கு ரயில்வே நிர்வாகத்தில் வேலை இருப்பதாக கூறி தற்போது பல மோசடி சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. அத்துடன் இந்த புதிய வகை மோசடி சம்பவங்கள் பற்றி தெற்கு ரயில்வே நிர்வாகத்திற்கு தெரிய வந்த நிலையில் அவர்கள் பொதுமக்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். மேலும் இது தொடர்பாக தெற்கு ரயில்வே சென்னை மண்டலம் மேலாளர் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை பகிர்ந்துள்ளார்.
சவுக்கு சங்கருக்கு ஜாமீன் வழங்கிய கரூர் நீதிமன்றம் – எந்த வழக்குக்கு தெரியுமா?
அந்த பதிவில் உண்மையான வேலை வாய்ப்பு குறித்த அறிவிப்புகள் ரயில்வே ஆட் சேர்ப்பு வாரியமான RRB மூலமாக மட்டுமே வெளியாகும் என்றும், எனவே ரயில்வே துறையில் வேலை இருப்பதாக கூறி பணம் கேட்கும் தனிநபர்கள் மற்றும் ஏஜென்சிகளை நம்ப வேண்டாம். இதனையடுத்து பொதுமக்கள் அனைவரும் இது போன்ற மோசடிகளில் சிக்காமல் உஷாராக இருக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.