தெற்கு ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு 2023. சென்னையை தலைமை இடமாகக் கொண்டு தெற்கு ரயில்வே இயங்கி வருகின்றது. அதன் வரிசையில் ஜூனியர் டெக்னிக்கல் அசோசியேட் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. தெற்கு ரயில்வே துறையில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட இருக்கின்றது. எனவே விண்ணப்பிக்க ஆர்வமுடைய நபர்கள் விண்ணப்பிக்கும் முறை , கல்வி , வயது , சம்பளம் , அனுபவம் , விண்ணப்பிக்க வேண்டிய தேதி , தேர்வு முறைகள் போன்ற அனைத்து விவரங்களையும் காண்போம்.
தெற்கு ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு 2023 ! ரூ. 25,000 சம்பளம் !
துறையின் பெயர் :
சென்னை தெற்கு ரயில்வே துறையில் காலிப்பணியிடம் இருக்கின்றது.
காலிப்பணியிடங்களின் பெயர் :
ஜூனியர் டெக்னிக்கல் அசோசியேட் ( Junior Technical Associate ) பணியிடங்கள் காலியாக இருக்கின்றது.
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை :
14 காலிப்பணியிடங்கள் தெற்கு ரயில்வே துறையில் காலியாக இருக்கின்றது.
கல்வித்தகுதி :
டெக்னிக்கல் துறையில் டிப்ளமோ அல்லது டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு 2023 ! நேர்காணல் மட்டுமே !
வயதுத்தகுதி :
ரயில்வே துறையில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுடைய நபர்களுக்கு 18 வயது முதல் 33 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் :
ஜூனியர் டெக்னிக்கல் அசோசியேட் பணியிடங்களுக்கு தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு ரூ. 25,000 முதல் ரூ. 30,000 வரையில் மாத ஊதியமாக வழங்கப்படும்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
26.09.2023 முதல் 09.10.2023ம் தேதிக்குள் தெற்கு ரயில்வே துறையில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும்.
விண்ணப்பிக்கும் முறை :
மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுடைய நபர்கள் ஆன்லைன் மூலம் தங்களின் விண்ணப்பபடிவத்தினை அனுப்ப வேண்டும்.
விண்ணப்பக்கட்டணம் :
1. SC / ST மற்றும் பெண்களுக்கு விண்ணப்பக்கட்டணம் கிடையாது.
2. மற்றவர்கள் ரூ. 500 விண்ணப்பக்கட்டணமாக செலுத்த வேண்டும்.
கட்டணம் செலுத்தும் முகவரி :
Central Bank of India ,
Chennai Main Branch ,
Account Number : 1186402609 ,
IFSC : CBIN0280876
தேர்வு முறை :
ஜூனியர் டெக்னிக்கல் அசோசியேட் பணியிடங்களை தகுதியான பணியாளர்கள் நேர்காணல் / நுண்ணறிவு தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியில் அமர்த்தப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை :
1. மேலே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்க்கை கிளிக் செய்ய வேண்டும்.
2. கேட்கப்பட்டு இருக்கும் பெயர் , பிறந்த தேதி , தந்தை பெயர் , முகவரி , மின்னஞ்சல் முகவரி மற்றும் கல்வி சான்றிதழ் விவரங்களை சரியாக நிரப்ப வேண்டும்.
3. புகைப்படம் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
4. பின்னர் விண்ணப்பக்கட்டணம் செலுத்திய PDFயை 1 MB சரி செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும்.
5. அனைத்து விவரங்களும் சரியாக நிரப்பட்டு இருக்கின்றதா என்பதை சரி செய்த பின் submit கொடுக்க வேண்டும்.
மேலும் தொடர்புக்கு :
9003145602 அல்லது 9003145603 என்ற எண்ணிற்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் வேலை நாளில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரையில் தொடர்பு கொள்ளலாம்.