பாலியல் புகார் உறுதியானால் திரைத்துறையில் 5 ஆண்டுகள் பணியாற்ற தடை –  தென்னிந்திய நடிகர் சங்கம் தீர்மானம்!பாலியல் புகார் உறுதியானால் திரைத்துறையில் 5 ஆண்டுகள் பணியாற்ற தடை –  தென்னிந்திய நடிகர் சங்கம் தீர்மானம்!

தென்னிந்திய நடிகர் சங்கம் தீர்மானம்: மலையாள சினிமாவில் சமீபத்தில் ஹேமா கமிட்டி ஒரு அறிக்கையை வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகைகளுக்கு ஏற்படும் பாலியல்கள் குறித்து அடுத்தடுத்து பிரபலங்கள் முன் வைத்து வருவதால் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அங்கு மட்டுமில்லாமல் எல்லா சினிமா துறையிலும் தற்போது பேசும் பொருளாக மாறியுள்ளது.

தென்னிந்திய நடிகர் சங்கம் தீர்மானம்

இந்நிலையில் தமிழ் சினிமாவில் செயல்படும் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பெண் உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், தென்னிந்திய நடிகர் சங்க பெண் உறுப்பினர்கள் பாதுகாப்பு கமிட்டி செயல்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து நேற்று  சென்னை தியாகராய நகரில் தென்னிந்திய நடிகர் சங்க பெண் உறுப்பினர்கள் பாதுகாப்பு கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

அந்த கூட்டத்தில்  நடிகர் சங்கத் தலைவர் நாசர், துணைத் தலைவர் பூச்சி எஸ்.முருகன், பொருளாளர் நடிகர் கார்த்தி மற்றும் பெண் கமிட்டி தலைவர் ரோகிணி, உறுப்பினர்கள் நடிகை சுஹாசினி, நடிகை குஷ்பு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Also Read: வட கொரியாவில் வெள்ளத்தால் கடும் சேதம் – தடுக்க தவறிய 30 அதிகாரிகளுக்கு மரண தண்டனை!!

அதில், ” சினிமா துறையில் எழும் பாலியல் குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டால் திரைத்துறையில் இருந்து  5 ஆண்டுகள் தடை செய்யப்படும். அதாவது சம்மந்தப்பட்டவர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டு உறுதியானால் அவர்களுக்கு திரைத் துறையில் பணியாற்ற 5 ஆண்டுகள் தடை விதித்து தயாரிப்பாளர்களுக்கு பரிந்துரை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் கொஞ்சம் படிங்க பாஸ்

தமிழ்நாடு ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரிய வாய்ப்பு

PM SHRI திட்டத்தில் தமிழ்நாடு அரசு கையெழுத்திட வேண்டும்

குஜராத்திற்கு மீண்டும் ரெட் அலர்ட்

HURUN உலக பணக்காரர் பட்டியல் 2024: முதலிடத்தை பிடித்த மும்பை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *