சென்னையின் முக்கிய பகுதிக்கு எஸ்.பி.பாலசுப்ரமணியம் பெயர்: தென்னிந்திய தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத பிரபலங்களில் முக்கியமானவர் தான் எஸ் பி பாலசுப்ரமணியம். கடந்த 1966 ஆம் ஆண்டு முதல் பின்னணி பாடகராக தனது கெரியரை தொடங்கிய தமிழில் மட்டுமின்றி தென்னிந்திய மொழிகளிலும், ஹிந்தி உள்பட வட இந்திய மொழிகளிலும் கிட்டத்தட்ட 40 ஆயிரம் பாடல்கள் பாடியுள்ளார்.
மேலும் அவருக்கு பத்ம ஸ்ரீ, பத்ம விபூஷன் உள்ளிட்ட விருதுகளை வாங்கியுள்ளார். அது மட்டுமின்றி ஆறு முறை தேசிய விருதையும் வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். SP Balasubrahmanyam
சென்னையின் முக்கிய பகுதிக்கு எஸ்.பி.பாலசுப்ரமணியம் பெயர்
அவருக்கு எஸ்பிபி சரண் என்ற மகன் இருக்கிறார். இவரும் சினிமாவில் பிரபலமாக இருந்து வருகிறார். இந்நிலையில் எஸ்பிபி சரண் தனது அப்பா-காக ஒரு விஷயத்தை கேட்டுள்ளார். அதாவது, சென்னை நுங்கம்பாக்கத்தில் எஸ் பி பாலசுப்ரமணியம் காம்தார் நகரில் வாழ்ந்து வந்தார். spb saran
Also Read: குக் வித் கோமாளி ஷோ புதிய ஆங்கர்? சபாஷ் சரியான போட்டி – வீடியோவை வெளியிட்ட விஜய் டிவி!
எனவே அந்த பகுதியை ‘எஸ் பி பாலசுப்ரமணியம் நகர்’ என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று முதல்வர் அலுவலகத்தில் எஸ்பிபி சரண் கோரிக்கை மனு அளித்துள்ளார். இந்த மனு விரைவில் பரிசீலனை செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க
விஜய் டிவி போட்டியாக Suntv தொடங்கிய புதிய ஷோ
இந்த போட்டோவில் இருக்கும் பிரபல நடிகர் யார் தெரியுமா?
எந்த ஒரு கெட்ட பழக்கம் இல்லாமல் வாழும் 6 ஹீரோக்கள்
மணிமேகலை மீது வழக்கு தொடர போகும் விஜய் டிவி?