நாடாளுமன்ற தேர்தல் நிறைவடைந்ததையடுத்து தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் 2024. ஜுன் 20ம் தேதி தொடங்கும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்திருந்த நிலையில், இந்த கூட்டத்தொடர் 29ந்தேதி வரை நடைபெறும் என அலுவல் ஆய்வு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக சபாநாகர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் 2024
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
சட்டப்பேரவை கூட்டத்தொடர் :
தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் கடைசியாக பிப்ரவரி 12 ஆம் தேதி நடைபெற்றது. மேலும் கூட்டத்தொடரில் தமிழ்நாடு அரசின் பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு விவாதங்கள் நடைபெற்றன. இதனையடுத்து மக்களவை தேர்தல் அறிவிப்பு காரணமாக சட்ட பேரவை நடவடிக்கைகள் ஒத்தி வைக்கப்பட்டதன. தற்போது மீண்டும் சட்டமன்ற கூட்டத்தொடர் தொடர்பாக சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
வரும் ஜூன் 20 ஆம் தேதி மானிய கோரிக்கை :
அந்த வகையில் வரும் ஜூன் 20 ஆம் தேதி சட்டப்பேரவைகூட்டத் தொடரை மானிய கோரிக்கை விவாதத்துக்காக கூட்டி உள்ளதாகவும், மேலும் சட்டப்பேரவை கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது குறித்து அலுவல் ஆய்வு குழு கூடி முடிவு செய்யப்படும் என்று கூறியிருந்தார்.
இனி யாருக்கும் கருப்பு பூனைப்படை பாதுகாப்பு கிடையாது – உள்துறை அமைச்சகம் அதிரடி அறிவிப்பு !
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் அப்பாவு வரும் ஜூன் 20 ஆம் தேதி முதல் ஜூன் 29 வரை சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் என அறிவித்துள்ளார். மேலும் இந்த கூட்டத்தொடரானது காலை 10 மணிக்கு தொடங்குவதற்கு பதில், அரை மணி நேரம் முன்னதாக, காலை 9.30 மணிக்கே சட்டப்பேரவை கூடும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.