Breaking News: இலங்கைக்கு எதிரான T20 தொடர்: சமீபத்தில் நடந்து முடிந்த T20 உலக கோப்பை போட்டியை 17 வருடங்களுக்கு பிறகு வென்று சாதனை படைத்தது இந்திய அணி.
இதனை தொடர்ந்து யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு விராட் கோலி, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா, பும்ரா மற்றும் ஜடேஜா ஆகியோர் தனது சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர்.
இதனால் ரசிகர்கள் பலரும் சோகத்தில் மூழ்கி இருந்தனர். இதனை தொடர்ந்து சிம்பாப்வே தொடருக்கு பின்னர் தற்போது இலங்கைக்கு எதிரான T20 போட்டியில் இந்திய அணி கலந்து கொள்ள இருக்கிறது.
இந்த போட்டி வருகிற ஜூலை 27 ஆம் தேதி முதல் ஆரம்பித்து 27, 28, 29 ஆகிய 3 நாட்களில் நடக்க இருக்கிறது.
மேலும் இந்த T20 தொடரில் ஹர்திக் பாண்டியா கேப்டனாக செயல்படுவார் என எதிர்பார்க்கப்பட்டு இருந்தது.
இலங்கைக்கு எதிரான T20 தொடர்
இந்நிலையில் BCCI ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, T20 தொடரில் சூர்யகுமார் யாதவ் கேப்டனாகவும், ஷுப்மன் கில் துணை கேப்டனாகவும் செயல்படுவார் என BCCI அறிவித்துள்ளது.
மேலும் இந்த தொடரிலிருந்து பும்ராவுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read: இளநிலை நீட் தேர்வு முடிவுகள் – நாளை மதியம் வரை காலக்கெடு கொடுத்த உச்ச நீதிமன்றம்!!
அதுமட்டுமின்றி கடந்த IPL போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கேப்டனாக ஹர்திக் பாண்டியா பொறுப்பேற்றதை ரசிகர்கள் மட்டுமின்றி,
சில அணியின் சில வீரர்களும் விமர்சித்த நிலையில் BCCI இந்த முடிவை எடுத்திருக்கலாம் என கூறப்படுகிறது.
T20 இந்திய அணி:
சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ஷுப்மன் கில் (துணை கேப்டன்), ரிஷப் பந்த், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்டியா, ரிங்கு சிங், ரியான் பராக், யஷஸ்வி ஜெய்ஸ்வால்.
ஷிவம் துபே, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், கலீல் அகமது, முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங்.