செப்டம்பர் 21ல் இலங்கை அதிபர் தேர்தல் - ரணில் விக்ரமசிங்கே மீண்டும் போட்டி !செப்டம்பர் 21ல் இலங்கை அதிபர் தேர்தல் - ரணில் விக்ரமசிங்கே மீண்டும் போட்டி !

வரும் செப்டம்பர் 21ல் இலங்கை அதிபர் தேர்தல் நடைபெறும் என அந்நாட்டு தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2019ம் ஆண்டு இலங்கையில் அதிபர் தேர்தல் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. அந்த தேர்தலில் கோத்தபய ராஜபக்சே வெற்றிபெற்று அதிபரானார். அத்துடன் மகிந்த ராஜபக்சே பிரதமராக தேர்வு செய்யப்பட்டார். இதனையடுத்து கடந்த 2022 ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட நிதி நெருக்கடிக்கு பொறுப்பேற்று கோத்தபய ராஜபக்சே மற்றும் மகிந்த ராஜபக்சே ஆகிய இருவரும் பதவி விலகினார். அந்த வகையில் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே மற்றும் பிரதமராக தினேஷ் குணவர்த்தன நியமிக்கப்பட்டனர்.

இந்நிலையில் தற்போதுள்ள அதிபரின் பதவிக்காலம் வரும் நவம்பர் மாதம் 17ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் தற்போது அதிபர் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் வரும் செப்டம்பர் மாதம் 21ம் தேதி புதிய அதிபருக்கான தேர்தல் நடைபெறும் என்றும், இதற்கான வேட்புமனுத்தாக்கள் வரும் ஆகஸ்ட் 15 தேதி முதல் தொடங்கும் என இலங்கை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுளளது.

கோவை மற்றும் நெல்லை மாநகராட்சி மேயர் தேர்தல் – மறைமுகமாக நடத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு !

இதனையடுத்து இலங்கை அதிபர் தேர்தலில் முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா போட்டியிடப்போவதாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கே மீண்டும் போட்டியிடப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன் வடக்கு, கிழக்கு மாகாணங்களை பிரதிநித்துவப்படுத்த தமிழ் பொது வேட்பாளரை களமிறக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *