ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் சித்திரை தேர் திருவிழா: திருச்சி மாவட்டத்தில் மிகவும் புகழ்பெற்ற கோவிலான அருள்மிகு ரங்கநாதர் கோவில் விளங்கி வருகிறது. இந்த கோவிலில் வருடந்தோரும் சித்திரை மாதத்தில் விருப்பன் திருநாள் என்ற பெயரில் சித்திரை தேர் திருவிழா கிட்டத்தட்ட 10 நாட்களாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான சித்திரை தேர் திருவிழா தற்போது கொடியேற்றத்துடன் தொடங்க இருக்கிறது. எனவே இந்த திருவிழாவை முன்னிட்டு தினதோறும் நம்பெருமாள் பல்வேறு வாகனங்களில் காலை மற்றும் மாலை நேரங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் வழங்குவார்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
மேலும் இவ் விழாவின் முக்கிய நிகழ்வான சித்திரை தேர் திருவிழா மே 6ம் திங்கள்கிழமை நடைபெற இருக்கிறது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதாவது சித்திரை தேர் திருவிழா வருகிற மே மாதம் 6ம் தேதி நடைபெற இருப்பதால், இதில் மக்கள் அனைவரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பிக்க வேண்டும் என்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும் உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் விதமாக மே 29ம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.