ஸ்டார்லைனர் விண்கலம் எப்போது பூமிக்கு திரும்பும்? சுனிதா வில்லியம்ஸ் நிலைமை என்ன? நாசா தகவல்!!ஸ்டார்லைனர் விண்கலம் எப்போது பூமிக்கு திரும்பும்? சுனிதா வில்லியம்ஸ் நிலைமை என்ன? நாசா தகவல்!!

ஸ்டார்லைனர் விண்கலம் எப்போது பூமிக்கு திரும்பும்: கடந்த ஜூன் 5ம் தேதி ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் என்ற வீரரும் சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்றனர். அவர்கள் அடுத்து எட்டு நாட்களுக்கு மட்டும் அங்கேயே தங்கி ஆய்வுகளை மேற்கொண்டு பூமிக்கு திரும்ப திட்டமிட்டிருந்தனர்.

ஆனால் அவர்கள் சென்ற ஸ்டார்லைனர் விண்கலத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் இருவரும் விண்வெளியில் சிக்கி கொண்டனர்.

ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட கோளாறுகளை வேகமாக சரி செய்தனர். இருப்பினும் அவர்கள் இரண்டு பேரையும் பூமிக்கு அழைத்து வர வேண்டாம் என்று நாசா முடிவெடுத்தது.

ஸ்டார்லைனர் விண்கலம் எப்போது பூமிக்கு திரும்பும்

அதாவது உலக பணக்காரர்களில் ஒருவரான  எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான க்ரு டிராகன் விண்கலம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு அனுப்பப்பட இருக்கிறது. அந்த விண்கலம் மூலம் சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் பூமிக்கு திரும்புவார்கள் என நாசா தெரிவித்துள்ளது.

Also Read: தமிழ்நாடு ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரிய வாய்ப்பு – இதை மிஸ் பண்ணிடாதீங்க மக்களே!

இதனை தொடர்ந்து அவர்கள் ஏற்றி சென்ற கோளாறு அடைந்த ஸ்டார்லைனர் விண்கலம் எப்போது பூமி திரும்பும் என்று பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். இந்நிலையில் இது குறித்து நாசா ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் சென்ற  ஸ்டார்லைனர் விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து  யாரையும் ஏற்றாமல் வருகிற செப்டம்பர் 6ம் தேதி மாலை 6.04 மணிக்கு பூமியை நோக்கிய பயணத்தை தொடங்கி சுமார் 6 மணி நேரம் பயணித்து விண்கலம் மறுநாள் 12.03 மணிக்கு பூமியை அடையும் என்று நாசா தெரிவித்துள்ளது.

இதையும் கொஞ்சம் படிங்க பாஸ்

மக்களே ஜாக்கிரதை – AC மூலம்  பரவும் உயிர்கொல்லி நோய் 

கேரளாவில் இந்த 4 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை

தமிழகத்தில் நாளை (29.08.2024) பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

என்னது ஆண் இனம் முடிவுக்கு வருகிறதா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *