மக்களவை தேர்தலில் ஆதிக்கம் செலுத்திய மாநில கட்சிகள் - மத்தியில் கூட்டணி ஆட்சி அமைய வாய்ப்பு !மக்களவை தேர்தலில் ஆதிக்கம் செலுத்திய மாநில கட்சிகள் - மத்தியில் கூட்டணி ஆட்சி அமைய வாய்ப்பு !

மக்களவை தேர்தலில் ஆதிக்கம் செலுத்திய மாநில கட்சிகள். தற்போது மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் மத்தியில் யார் ஆட்சியமைக்கப்போவது என்பது குறித்து அனைவர் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், தற்போது நடைபெற்ற தேர்தலில் பெருமளவில் தேசிய காட்சிகளை காட்டிலும் மாநில காட்சிகள் முக்கிய பங்கு வகித்துள்ளன.

தற்போது நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் தேசிய கட்சிகளுக்கு அடுத்து மாநில காட்சிகள் அதிக தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றன. தற்போது வரை வெளியான முன்னணி நிலவரப்படி,

உத்திரபிரதேசத்தில் மொத்தம் உள்ள 80 இடங்களில் சமாஜ்வாதி கட்சி 34 தொகுதிகளிலும்,

ஆந்திராவில் உள்ள 25 இடங்களில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி 16 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன.

தமிழகத்தில் மொத்தமுள்ள 40 தொகுதிகளும் திமுக காங்கிரஸ் கூட்டணி முன்னிலை வகிக்கறது.

பீகாரில் நிதிஷ் குமாரின் ஜேடியு கட்சி 13 தொகுதிகளிலும், ராம்விலாஸ் பஸ்வனின் லோக் ஜன சக்தி 5 தொகுதிகளிலும், முன்னிலை வகிக்கின்றனர்.

மேலும் மேற்கு வங்கம் மாநிலத்தில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் 29 இடங்களிலும், மஹாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரேவின் தலைமையிலான சிவசேனா கட்சி முன்னிலை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

பவன் கல்யாண் முதல் சூப்பர் ஸ்டார் பட நடிகை வரை.. தேர்தலில் ஜெயித்த சினிமா நட்சத்திரங்கள் லிஸ்ட் இதோ!

இதன் மூலம் பெரும்பாலான மக்களவை தொகுதிகளில் மாநில காட்சிகள் ஆதிக்கம் செலுத்துவதால், இந்நிலையில் மாநில கட்சிகளின் ஆதரவில்லாமல் மத்தியில் பாஜக அல்லது காங்கிரஸோ ஆட்சியமைக்க முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *